தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன்மதிப்பீடு : விடைகள் - II

    2.

    இதழ்களின் பணியை எத்தனை நிலைகளாகப் பகுக்கலாம்? விளக்குக?

    செய்திகளைப் பரிமாறிக் கொள்வதும், கருத்துகளைப் புலப்படுத்துவதும் ஒரு மொழியின் அடிப்படைப் பணியாகும். அந்நிலையில் ஒரு மொழியில் கிடைக்கும் செய்திகளை அதே மொழி அறிந்த மக்களுக்குச் சுருக்கமாகவோ, விளக்கமாகவோ கூறுவது முதல்நிலையாகும்.

    ஒரு மொழி பேசும் மக்களிடையே மற்றொரு மொழி பேசும் மக்களின் கருத்துகளை அறியச் செய்கின்ற மொழிபெயர்ப்புப் பணி இரண்டாவது நிலையாகும்.

    மொழி வளர்ச்சி அடைய வேண்டும் என்ற நோக்கத்திற்கு அடிப்படையாக இருக்கின்ற சொல்லாக்கப் பணி மூன்றாவது நிலையாகும்.

    புதியனவற்றிற்குப் புதிய சொற்கள் பெயர்ப்பு மொழியில் படைக்க முடியாத நிலையில் அதனை நிறைவடையச் செய்கின்ற ஒலிபெயர்ப்புப் பணி நான்காவது நிலையாகும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 12-09-2017 17:54:45(இந்திய நேரம்)