தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

 • பாடம் - 6

  P20136 சொல்லாக்கத்தின் போக்கு

  இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

  இந்தப் பாடம் மொழிபெயர்ப்பில் முக்கிய இடம் வகிக்கும் சொல்லாக்கத்தின் தற்போதைய நிலை, எதிர்காலப் போக்குகள் குறித்து விளக்குகின்றது.

  சொல்லாக்கத்தில் சொற்பொருள் மாற்றம், தரப்படுத்துதல், நிலை பேறாக்கம் பற்றியும் அழுத்தமாக விவாதிக்கின்றது.

  இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  • சொல்லாக்கம் குறித்துத் துறை வல்லுநர்களின் இன்றைய கருத்துகளை அறியலாம்.

  • சொற்பொருள் மாற்றம் நிகழ்வதற்கான காரணங்களை அறிந்து கொள்ள முடியும்.

  • தமிழில் இதுவரை நடைபெற்றுள்ள சொல்லாக்க முயற்சிகளை மதிப்பிட வேண்டியதன் தேவையினை அறியலாம்.

  • சொல்லாக்கத்தில் தரப்படுத்துதலும் நிலைபேறாக்கமும் பெறும் இடத்தினை அறியலாம்.

  • சொல்லாக்கத்தின் எதிர்கால நிலை குறித்து அறிந்துகொள்ள முடியும்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 10:58:31(இந்திய நேரம்)