தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Lesson 5 Main-விடை

  • 2 - விடை
    2

    தொகைநூல்கள் தொகுக்கும் முன்னரே பௌத்தம் தமிழகத்தில் வேரூன்றியிருந்தது என்பதற்கான சான்று ஒன்றினைக் குறிப்பிடவும்.


    எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகிய நற்றிணையில் இளம்போதியார் பாடல் ஒன்று (72-ஆம் பாடல்) இடம்பெற்றுள்ளது. இளம்போதியார் பௌத்த சமயத்தைச் சார்ந்தவர். அவருடைய பாடல் தொகைநூல்களில் ஒன்றாகிய நற்றிணையில் இடம் பெற்றுள்ளது. இதிலிருந்து அதற்கு முன்னரே பௌத்த சமயம் தமிழகத்தில் வேரூன்றியிருந்தது என்பதை அறியலாம்.


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 11:52:27(இந்திய நேரம்)