தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Lesson 1 Main-பாட முன்னுரை


  • ‘பழந்தமிழ் நூல்களில் சமணம்’ என்ற பாடத்தில் சமண சமயம் தொன்மைக் காலம் தொட்டே தமிழகத்தில் இடம் பெற்றிருந்ததை அறிந்தீர்கள். சங்ககால நூல்களில் கிடைக்கும் குறிப்புகள் அவர்தம் இருப்பையும் கோட்பாட்டையும் காட்டி நிற்பதோடு அறக் கருத்துகளில் அவர்தம் ஈடுபாட்டையும் புலப்படுத்தின. சமய வேறுபாடின்றி வாழ்க்கையைச் செம்மையாக வாழ்வதற்குரிய நெறிமுறைகளாக அவை அமைந்து இருப்பதையும் நீங்கள் தெளிவாக அறிந்திருப்பீர்கள்.

    ‘சமணத் தமிழ்க் காப்பியங்கள்’ என்ற இந்தப் பாடத்தில் ஐம்பெருங் காப்பியங்களில் சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, வளையாபதி ஆகிய மூன்றைப் பற்றியும் சிறு காப்பியங்களில் சூளாமணி, உதயணகுமார காவியம், யசோதர காவியம், நாககுமார காவியம், நீலகேசி ஆகிய ஐந்தைப் பற்றியும் படிக்கப் போகிறீர்கள்.

    உதிரிப்பாடல்களாக அமைந்த சங்க இலக்கியப் போக்கிலிருந்து தொடர் நிலைச் செய்யுளில் கதையைக் கூறும் பாங்கில் காப்பியங்கள் தோன்றின. பழந்தமிழ்க் காப்பியங்களில் பெரும்பாலானவை சமணர் தந்த கொடையே. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோணத்தில் புதிய மரபைத் தோற்றுவித்தன. அத்துடன் பின் வந்தவர்க்கு முன்னோடியாகவும் அமைந்தன. அவை பற்றி விரிவாகப் படிப்பதோடு அவை தமிழினச் செழுமைக்கு எங்ஙனம் உதவின என்பதையும் இப்பாடத்தில் நீங்கள் படிக்கப் போகிறீர்கள். இனி, பாடத்திற்குள் செல்லலாமா?

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 11:53:58(இந்திய நேரம்)