தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

5.4 தொகுப்புரை

  • 5.4 தொகுப்புரை

    மாணவர்களே ! சொல்லின்பத்தைத் தாங்கள் இப்போது
    உணர்ந்திருப்பீர்கள் என எண்ணுகிறேன்.

    மற்றொரு திரைப்படப் பாடலை, உங்களுக்கு நினைவு படுத்தி
    இப்பகுதியை நிறைவு செய்கிறேன்.

    வசந்த காலங்கள் எனத் தொடங்கும் திரைப்படப் பாடலில்,

    இதழ்கள் ஊறுமடி (இரு இதழ்களும் ஊறுமடி)

    இதழ் - கள் - ஊறுமடி [இதழில் கள் (அமுதம், மது)
    ஊறுமடி]

    எனப் பிரித்தும், பிரிக்காமலும் பொருள் வேறுபாடு காட்டப்
    பெற்றிருக்கும். சொல்லணி படித்த நீங்கள் இதுபோல பல
    பாடல்களை அறிந்து மகிழலாம்.

    1.
    மடக்கு அணியின் இலக்கணம் தருக.
    2.
    மடக்கு அணிக்கான இடங்கள் யாவை?
    3.
    ஓர் எழுத்து மடக்கின் வகைகளைத் தருக.
    4.
    தற்காலத்தில் மடக்கு அணி பயின்று வருகிறதா? ஒரு
    சான்று தருக.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 14:33:55(இந்திய நேரம்)