Primary tabs
-
CO314 திருக்குறள் காட்டும் வாழ்வியல் - 1
பொது விளக்கம்பொது விளக்கம் இத்தொகுதியில் கீழ்க்குறிப்பிடும் 6 பாடங்கள்
இடம் பெற்றுள்ளன. அவை முறையே, திருக்குறள் ஒரு
பொதுமறை, திருவள்ளுவரும் இறைமையும், இல்லறவியல் - 1,
இல்லறவியல் - 2, துறவு, நட்பு என்பவையாகும். இவற்றில் முதல்
இரண்டு பாடங்களும், திருவள்ளுவரின் சிந்தனைகளின்
சிறப்புகளையும், அவரது பொதுமை உணர்வினையும், காலம்
கடந்து நிற்கும் அவரது உயர்ந்த கருத்துகளையும், குறளின்
தந்நிகரற்றத் தன்மையினையும் அடிப்படையாகக் கொண்டு
அமைக்கப்பட்டுள்ளன.அறத்துப்பாலில் முக்கியமான இடம் வகிப்பது இல்லறவியல்.
மொத்தம் உள்ள 38 அதிகாரங்களில் 20 அதிகாரங்களில்
இல்வாழ்க்கைக்கு உரிய செய்திகளே கூறப்பட்டுள்ளன. எனவே,
கருத்துகளின் மிகுதியையும், இன்றியமையாமையையும்
மனத்திற்கொண்டு இல்வாழ்க்கை இரண்டு பகுதிகளாகப்
பிரிக்கப்பட்டுள்ளன.திருவள்ளுவர் கூறும் அறநெறிக் கருத்துகள் எந்த ஒரு சார்பு
இல்லாமல், எல்லோருக்கும் பொருந்துகின்ற, எல்லோரும் ஒத்துக்
கொள்ளுகின்ற உயர்ந்த கருத்துகளாகத் திகழ்கின்றன.
அக்கருத்துகள் திருக்குறள் ஒரு பொதுமறை என்ற தலைப்பில்
தொகுத்துக் கூறப்பட்டுள்ளன.சமய சார்பு இல்லாத, கடவுள் பற்றிய கோட்பாடுகள் பலவற்றை
வள்ளுவர் எடுத்துரைத்துள்ளார். அவற்றைப் பற்றிய தொகுப்பே
திருவள்ளுவரும் இறைமையும் என்ற பாடமாகும்.இல்வாழ்க்கையில் தனிமனிதனுக்குத் தேவையான பண்புகள்,
தேவைகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு,
இல்வாழ்க்கை - 1 என்ற பாடம் அமைக்கப்பட்டுள்னது.இல்வாழ்வான் சமுதாயத்துடன் தொடர்பு கொள்ளும்போது
தேவைப்படும் இயல்புகள் பற்றிய செய்திகள் இல்வாழ்க்கை-2
என்ற பாடத்தில் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன.துறவு பற்றி வள்ளுவர் கூறும் கருத்துகள், பிறர் கூறும்
கருத்திலிருந்து எவ்வாறு வேறுபட்டது, இல்வாழ்வானுக்கும்
அவை எந்த வகையில் பொருந்தும் என்பது பற்றிய செய்திகள்
துறவு என்ற பாடத்தில் இடம்பெற்றுள்ளன.கல்வியின் பெருமையினை நன்கு உணர்ந்தவர் வள்ளுவர்.
எனவே, கல்வி என்ற தலைப்பில் ஒரு அதிகாரம்
அமைத்திருந்தாலும், கல்வியைப் பற்றிய செய்திகளைப் பல
அதிகாரங்களில் குறிப்பிடுகிறார். அவற்றைத் தொகுத்துக் கல்வி
என்ற தலைப்பில் கூறப்பட்டுள்ளது.மனித வாழ்க்கைக்கு மிகவும் தேவையான கூறுகளில் ஒன்று நட்பு.
அதைப்பற்றி வள்ளுவர் பல அரிய கருத்துகளை வழங்கியுள்ளார்.
அவற்றின் தொகுப்பே நட்பு எனும் பாடம்.