Primary tabs
-
C03132 : திருவள்ளுவரும் இறைமையும்
இறைமையைப் பற்றி வள்ளுவர் கூறும் கருத்துகளைத்
தொகுத்துக் கூறுகின்றது. முதலாவதாக பண்டைத் தமிழரின்
இறை நம்பிக்கை பற்றியும் வழிபாட்டைப் பற்றியும்
குறிப்பிடுகின்றது. நல்ல ஆட்சி வழங்கும் மன்னன் எவ்வாறு
இறைவனாகக் கருதப்படுகிறான் என்பது பற்றிய வள்ளுவரின்
கருத்து சொல்லப்படுகிறது. சமயவாதிகளெல்லாம் இல்லறத்தை
வெறுத்து ஒதுக்கும் சூழலில், வள்ளுவர் இல்லறத்திற்குக்
கொடுக்கும் சிறப்பும் எடுத்துரைக்கப்படுகிறது.இறைவன் அகரமாக இருப்பவன், விருப்பு வெறுப்பு
இல்லாதவன் என்ற வள்ளுவர் கருத்து விளக்கப்படுகிறது.
வள்ளுவர் கூறும் அறக்கடவுள் பற்றிய செய்தியும் இடம்
பெற்றுள்ளது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
அ.
பண்டைத் தமிழரின் இறைநம்பிக்கையையும்
வழிபாட்டையும் தெரிந்து கொள்ளலாம்.ஆ.
வள்ளுவர் கூறும் இறைமையைப் பற்றி அறிந்து
கொள்ளலாம்.இ.
இறைமைக் கோட்பாட்டில் வள்ளுவர் இல்வாழ்க்கைக்குக்
கொடுக்கும் சிறப்பினை விளக்கலாம்.ஈ.
வள்ளுவர் நோக்கில் இறைவன் எத்தகைய தன்மை
உடையவன் என்பதனை அறிந்து கொள்ளலாம்.