Primary tabs
-
C03135 : துறவு
பொதுவாகத் துறவு என்பதனைச் சமயத்தோடும்
சமயவாதிகளோடும் தொடர்புபடுத்தி, இல்வாழ்க்கைக்கு
எதிரான ஒன்றாக - இல்வாழ்க்கையை விட்டுவிட்டு,
காட்டுக்குச் சென்று தவம் செய்யும் ஒரு செயலாக - கூறும்
மரபு உள்ளது. இதற்கு முற்றிலும் மாறுபட்ட நிலையில்
அறத்துப்பாலில் இல்வாழ்க்கையைப் பற்றிக் கூறும்
இல்லறவியலுக்கு அடுத்ததாகத் துறவறவியல் என்ற
தலைப்பில் ‘துறவு’ பற்றி வள்ளுவர் கூறுகின்றார். வள்ளுவர்
கூறும் அத்துறவு நிலை பற்றிய செய்திகளே இப்பாடமாக
அமைகின்றன.
இப்பாடத்தைப் படிப்போர் கீழ்காணூம் பயன்களைக்
கைவரப் பெறுவர்- வள்ளுவர் நோக்கில் துறவு நிலையை விளக்குதல்.
- உடைமைகள்,
பற்று, ஆவணம் ஆகியவற்றிற்கும்
துறவிற்கும் இடையே உள்ள தொடர்பை
வள்ளுவர் வழியில் விளக்குதல். - பற்றை நீக்க காட்டும் வழியினை எடுத்துரைத்தல்.
- ‘தவம்’ என்ற
சொல்லுக்கான வள்ளுவரின்
விளக்கத்தைப் பொருள் கொள்ளுதல்