Primary tabs
-
C03134: இல்லறவியல் - 2
இந்தப் பாடம், இல்வாழ்வான் சமுதாயத்துடன் தொடர்பு
கொண்டு வாழும் போது, அன்பு செலுத்துவதினாலும்,
இனிமையாகப் பேசுவதினாலும், நன்றியுடன் இருப்பதினாலும்,
நடுவு நிலைமையுடன் செயல்படுவதினாலும் ஏற்படும்
நன்மைகளைக் கூறுகிறது. மேலும் ஒழுக்கம், பிறன்
இல்விழையாமை, ஈதல் போன்றவற்றின் சிறப்பும்
சொல்லப்படுகிறது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
•
அன்பைப் பற்றி வள்ளுவர் கூறும் கருத்துகளைத்
தெரிந்து கொள்வீர்கள்.•
இனிமையாகப் பேசுவதால் ஏற்படும் நன்மைகளை
அறியலாம்.•
நடு நிலைமை தவறாத தன்மையின் வாயிலாக
வெளிப்படும் நன்மைகளை அறிந்து கொள்வீர்கள்.•
ஒழுக்கமாக நடப்பதின் பெருமை புலப்படும்.
•
பிறன் மனைவியை விரும்பாதவர்களின் பெருமையை
உணர்வீர்கள்.•
தான் பெற்ற செல்வத்தைப் பிறருக்குக் கொடுத்து
உதவுவதால் ஏற்படுகின்ற சிறப்புகளை அறிய இயலும்.•
புகழோடு வாழ்வதின் இன்றியமையாமையைப் புரிந்து
கொள்வீர்கள்.