Primary tabs
-
இப்பாடப்பகுதியில் வள்ளுவர் கூறும் அன்பின் சிறப்பினையும்,
இனிய சொற்களைப் பேசுவதினால் ஏற்படும் நன்மைகளையும்
வள்ளுவர் கூறியவண்ணம் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. நடுவு
நிலைமை பிறழக் கூடாது; அது தம் வழித்தோன்றல்களையும்
பாதிக்கும். மேலும், உலக நடையுடன் ஒத்து நடந்து பிறருக்கு
உதவவேண்டும்; பிறரின் தேவையை அறிந்து ஈகை செய்ய
வேண்டும்; அவ்வாறு செய்தால் நிலைத்த புகழ் கிடைக்கும்;
அதுதான் உயிர் வாழ்வதின் சிறந்த பயன் என்கிறார் வள்ளுவர்.
இவற்றையெல்லாம் அவர் எங்கிருந்து பெற்றார்? தமிழர்களின்
வாழ்விலிருந்து. ‘சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும்‘
என்பது தமிழ்ப் பழமொழி. தமிழ்ச் சமுதாயத்தில் இருந்து
பண்பாட்டை அற இலக்கியமாக வள்ளுவர் வெளிப்படுத்தியுள்ளார்.