தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பகுதி 4.0

  • 4.0 பாட முன்னுரை

    இல்வாழ்க்கை பற்றிய முதல் பாடத்தில், இல்வாழ்க்கையில்
    ஈடுபடும் தனி மனிதனுக்குத் தேவையான வாழ்க்கைத்துணை,
    மக்கள் செல்வம், விருந்து ஓம்பல் முதலியன பற்றிய வள்ளுவரின்
    கருத்துகள் கூறப்பட்டன.

    இல்வாழ்க்கை பற்றிய இரண்டாவது பாடத்தில், இல்வாழ்வான்
    சமுதாயத்தில் ஏற்படுத்திக் கொள்ளும் புறத் தொடர்புகளுக்குத்
    தேவையானவை பற்றிய கருத்துகள் கூறப்படுகின்றன.

    சமுதாயத்தோடு தொடர்பு கொண்டு வாழும் பொழுது, எவ்வாறு
    பிறரிடம் இனிமையாகப் பேசி, அன்பு செலுத்தி வாழ வேண்டும்;
    ஒழுக்கம், நடுவு நிலைமை, ஈகை, ஊரோடு ஒத்துச் செல்லுதல்,
    பிறன் பொருளை விரும்பாமை முதலிய பண்புகளை எவ்வாறு
    பின்பற்ற வேண்டும் என்பவை பற்றிய செய்திகள் இந்தப் பாடப்
    பகுதியில்     இடம்     பெற்றுள்ளன. இல்வாழ்க்கையில்
    பின்பற்றுவதற்காக வள்ளுவர் வழங்கும் அறிவுரைகளிலிருந்து,
    தமிழர் பண்பாடு எவ்வாறு வெளிப்படுத்தப்படுகிறது என்பதுவும்
    கூறப்படுகின்றது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 20:00:27(இந்திய நேரம்)