தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பகுதி 2.0

  • 2.0 பாட முன்னுரை

    உலகிலுள்ள அறநூல்கள் பலவும் ஏதாவது ஒரு சமயத்தைத்
    தழுவியோ     அல்லது ஒரு சமயத்தின் சார்பாகவோ
    எழுதப்பட்டுள்ளன. அவற்றுள்ளும் சில நூல்கள், சமயத்தைப்
    பரப்பும் நோக்குடனே எழுந்துள்ளன. எந்த ஒரு சமயச் சார்பும்
    இல்லாமல் சமயப்பொறையுடன் எழுதப்பட்ட அறநூல்கள் மிகவும்
    அரிதாகவே காணப்படுகின்றன. அந்த அரிய நூல்களில்
    ஒன்றாகத் திருக்குறள் விளங்குகிறது.


    • பொதுமைè¢ கருத்துகள்

    எச்சமயத்தைச் சார்ந்தவராக இருந்தாலும், அவர்களுக்கும்
    பொருந்தும் வகையில், மனித குலம் முழுமைக்கும்
    பொருந்துகின்ற பொதுமைக் கருத்துகளை வழங்கியவர்
    வள்ளுவர். சமயங்கடந்த அவரது கருத்துகள் காலம் கடந்தும்
    வாழ்கின்றன.


    • கடவுள் கோட்பாடு

    கடவுள் கோட்பாடு, சமயத்திற்குச் சமயம் வேறுபடும்.
    காலத்திற்குக் காலம் மாறுபடும். சூழலுக்குச் சூழல் புதுப்புதுத்
    தத்துவங்களாக உருவெடுக்கும். ஆனால் திருவள்ளுவர் கூறும்
    கடவுள் பற்றிய இறைமை அல்லது இறைக்கோட்பாடு,
    காலத்தாலோ, சூழலாலோ பாதிக்கப்படாத உயர்ந்த கோட்பாடாக
    அமைந்துள்ளது. அதைப் பற்றிய கருத்துகள் இந்தப்பாடத்தில்
    தொகுத்துக் கூறப்பட்டுள்ளன.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 19:57:19(இந்திய நேரம்)