Primary tabs
உலகம் திரியா ஓங்குஉயர் விழுச்சீர்ப்
பலர்புகழ் மூதூர்ப் பண்புமேம் படீஇய
ஓங்குயர் மலயத்து அருந்தவன் உரைப்பத்
தூங்குஎயில் எறிந்த தொடித்தோள் செம்பியன்
விண்ணவர் தலைவனை வணங்கிமுன் நின்று
மண்ணகத்து என்தன் வான்பதி தன்னுள்
மேலோர் விழைய விழாக்கோள் எடுத்த
நால்ஏழ் நாளினும் நன்குஇனிது உறைகென
அமரர் தலைவன் ஆங்குஅது நேர்ந்தது
மெய்த்திறம் வழக்கு நன்பொருள் வீடுஎனும்,
இத்திறம் தத்தம் இயல்பினில் காட்டும்,
சமயக் கணக்கரும் தம்துறை போகிய
அமயக் கணக்கரும் அகலார் ஆகிக
கரந்துஉரு எய்திய கடவு ளாளரும்,
பரந்துஒருங்கு ஈண்டிய பாடை மாக்களும
ஐம்பெருங் குழுவும், எண்பேர் ஆயமும்
கொடித்தேர்த் தானைக் கொற்றவன் துயரம்,
விடுத்த பூதம் விழாக்கோள் மறப்பின்
மடித்த செவ்வாய் வல்எயிறு இலங்க
இடிக்குரல் முழக்கத்து இடும்பை செய்திடும்
தொடுத்தபா சத்துத் தொல்பதி நரகரைப்
புடைத்துஉணும் பூதமும் பொருந்தா தாயிடும்
மாயிரு ஞாலத்து அரசுதலை ஈண்டும்
வச்சிரக் கோட்டத்து மணம்கெழு முரசம்
கச்சை யானைப் பிடர்த்தலை ஏற்றி
ஏற்றுஉரி போர்த்த இடியுறு முழக்கின்
கூற்றுக்கண் விளிக்கும் குருதி வேட்கை
முரசுகடிப் பிடூஉம் முதுக்குடிப் பிறந்தோன்
திருவிழை மூதூர் வாழ்கென்று ஏத்தி
வானமும் மாரி பொழிக மன்னவன்
தீவகச் சாந்தி செய்தரு நல்நாள்
ஆயிரம் கண்ணோன் தன்னோடு ஆங்குஉள
நால்வேறு தேவரும் நலத்தகு சிறப்பில்
பால்வேறு தேவரும் இப்பதிப் படர்ந்து
மன்னன் கரிகால் வளவன் நீங்கியநாள்
இந்நகர் போல்வதுஓர் இயல்பினது ஆகிப்
பொன்னகர் வறிதாப் போதுவர் என்பது
தோரண வீதியும் தோம்அறு கோட்டியும்
பூரண கும்பமும் பொலம்பா லிகைகளும்
காய்க்குலைக் கமுகும் வாழையும் வஞ்சியும்
பத்தி வேதிகைப் பசும்பொன் தூணத்து
விழவுமலி மூதூர் வீதியும் மன்றமும்
கதலிகைக் கொடியும் காழ்ஊன்று விலோதமும்
நுதல்விழி நாட்டத்து இறையோன் முதலாப்
பதிவாழ் சதுக்கத்துத் தெய்வம்ஈ றாக
வேறுவேறு சிறப்பின் வேறுவேறு செய்வினை
தண்மணல் பந்தரும் தாழ்தரு பொதியிலும்
ஒட்டிய சமயத்து உறுபொருள் வாதிகள்
செற்றமும் கலாமும் செய்யாது அகலுமின்
வெண்மணல் குன்றமும் விரிபூஞ் சோலையும்
தண்மணல் துருத்தியும் தாழ்பூந் துறைகளும்
தேவரும் மக்களும் ஒத்துஉடன் திரிதரும்
ஒளிறுவாள் மறவரும் தேரும் மாவும்
களிறும் சூழ்தரக் கண்முரசு இயம்பிப்
பசியும் பிணியும் பகையும் நீங்கி
வசியும் வளனும் சுரக்கென வாழ்த்தி
விழாவறை காதை முற்றிற்று.
விழா
அறை காதை முற்றிற்று.