தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

திருஞானசம்பந்தரின் தனிச்சிறப்புப் பதிகங்கள்

  • த.பாலசரஸ்வதி

    முனைவர் இரா.மாதவி
    உதவிப் பேராசிரியர்
    இசைத்துறை

    ஸ்ரீமதி பாலசரஸ்வதி அவர்கள் இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழ் பெற்ற கலைஞர்களுள் ஒருவராவர். இவர் 1918 ஆம் ஆண்டு மே மாதம் பதின்மூன்றாம் தேதி பிறந்தார். இவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இசையிலும் நாட்டியத்திலும் புகழ் பெற்ற கலைஞர்களாகத் திகழ்ந்தனர். 18 ஆம் நூற்றாண்டில் இவரது பாட்டியின் தாயார் பாப்பம்மாள் தஞ்சாவூர் சமஸ்தானத்தில் புகழ்பெற்ற கலைஞராவார். இவரது பாட்டி வீணா தனம்மாள் (1867-1938) பல புகழ்பெற்ற இசைக் கலைஞர்களை உருவாக்கியுள்ளார். இவரது தாயார் ஜெயம்மாள் (1890-1967) சிறந்த சங்கீத புலமை பெற்றவராகவும் தமது மகள் பாலசரஸ்வதிக்குக் கலைத்துறைக்கு ஊக்கமளிப்பவராகவும் இருந்தார். இவர் நடனத்துறையில் புத்துணர்ச்சி மலர காரணமாயிருந்தார். பரத நாட்டியம் மரபுவழி வந்த தேவதாசிகளால் மட்டும் ஆடப்பட்டு வந்தது. அனைவராலும் ஆடப்படக்கூடிய அற்புதமான கலை எனப் போராடினர். மேலும், இவர் கையாளுகின்ற பாத வேலைப்பாடுகளும், அடவுகளும், முகபாவங்களும் அனைவரையும் அதிசயிக்க வைத்தன. முதன் முதலில் தென்னிந்தியாவை விட்டு 1934இல் கல்கத்தாவில் மேடை கலை நிகழ்ச்சியாக அறிமுகப்படுத்தினார். உலகம் முழுவதும் தமது கலைப் பயணத்தை தொடர்ந்து புகழ் பெற்ற நாட்டியப் பெண்மணியாகத் திகழ்ந்தார். 1977இல் தெய்வீக நாட்டியக் கலைஞர் என நியூயார்க் டைம் பத்திரிகையின்மூலம் உலகம் முழுவதும் பாராட்டப்பட்டார். பிரதமர் விருது, சங்கீத நாடக அகாடமி விருது ( 1955 ), பத்ம விபூஷன் விருது (1977), சங்கீத கலாநிதி சென்னை, மியூசிக் அகாடமி விருது (1973) என பல புகழ் பெற்ற விருதுகளைப் பெற்றுள்ளார். பாலசரஸ்வதி அவர்கள் நாட்டியத்துறையில் நூல்கள் எழுதியுள்ளார். ஆண்டு தோறும் சென்னையில் நடைபெறும் இசைவிழாவில் சங்கீத வித்வத் சபையில் ஆராய்ச்சி கட்டுரைகள் பல வழங்கி சொற்பொழிவுகளும் ஆற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் பாலசரஸ்வதி அகாடமியை நடத்தி வந்தனர். தற்பொழுது அவரது வம்ச வழியினரால் பாதுகாக்கப்பட்டு தொடர்ந்து பல மாணவர்களை உருவாக்கி நடத்தி வருகின்றனர். இவரது மகள் ஸ்ரீமதி லட்சமி அவர்கள் (1943-2001) அவரது தாயார் பரத நாட்டியத்தில் கையாண்ட முறையைப் பின்பற்றிக் கலையை வளர்த்து வருகிறார். பால சரஸ்வதி அம்மையர் அவர்களால் பரதக் கலையானது புத்துயிர் பெற்று மறுமலர்ச்சியடைடந்தது என்றால் மிகையாகாது.

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:15:55(இந்திய நேரம்)