முகப்பு |
ஒளவையார் |
15. பாலை |
பறை பட, பணிலம் ஆர்ப்ப, இறைகொள்பு |
||
தொல் மூதாலத்துப் பொதியில் தோன்றிய |
||
நால் ஊர்க் கோசர் நல் மொழி போல, |
||
வாய் ஆகின்றே-தோழி!-ஆய் கழல் |
||
சேயிலை வெள் வேல் விடலையொடு |
||
தொகுவளை முன்கை மடந்தை நட்பே. |
உரை | |
உடன்போயின பின்றை, தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றாள். நிற்ப, செவிலித்தாய் நற்றாய்க்கு அறத்தோடு நின்றது. -ஒளவையார் |
23. குறிஞ்சி |
அகவன்மகளே! அகவன்மகளே! |
||
மனவுக் கோப்பு அன்ன நல் நெடுந் கூந்தல் |
||
அகவன்மகளே! பாடுக பாட்டே; |
||
இன்னும், பாடுக, பாட்டே-அவர் |
||
நல் நெடுங் குன்றம் பாடிய பாட்டே. |
உரை | |
கட்டுக்காணிய நின்றவிடத்து, தோழி அறத்தோடு நின்றது. - ஒளவையார் |
28. பாலை |
முட்டுவேன்கொல்? தாக்குவேன்கொல்? |
||
ஓரேன், யானும்: ஓர் பெற்றி மேலிட்டு, |
||
'ஆஅ! ஒல்' எனக் கூவுவேன்கொல்?- |
||
அலமரல் அசைவளி அலைப்ப, என் |
||
உயவு நோய் அறியாது, துஞ்சும் ஊர்க்கே. |
உரை | |
வரைவிடை ஆற்றாளாய்க் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - ஒளவையார் |
29. குறிஞ்சி |
நல் உரை இகந்து, புல் உரை தாஅய், |
||
பெயல் நீர்க்கு ஏற்ற பசுங்கலம் போல |
||
உள்ளம் தாங்கா வெள்ளம் நீந்தி, |
||
அரிது அவாவுற்றனை-நெஞ்சே!-நன்றும் |
||
பெரிதால் அம்ம நின் பூசல், உயர் கோட்டு |
||
மகவுடை மந்தி போல |
||
அகன் உறத் தழீஇக் கேட்குநர்ப் பெறினே. |
உரை | |
இரவுக்குறி மறுக்கப்பட்ட தலைமகன், 'இவர் எம்மை மறுத்தார்' என்று வரைந்து கொள்ள நினையாது, பின்னும் கூடுதற்கு அவாவுற்ற நெஞ்சினை நோக்கிக் கூறியது. - ஒளவையார் |
39. பாலை |
'வெந் திறல் கடு வளி பொங்கர்ப் போந்தென, |
||
நெற்று விளை உழிஞ்சில் வற்றல் ஆர்க்கும் |
||
மலையுடை, அருஞ் சுரம்' என்ப-நம் |
||
முலையிடை முனிநர் சென்ற ஆறே. |
உரை | |
பிரிவிடை 'ஆற்றல் வேண்டும்' என்ற தோழிக்கு, 'யாங்ஙனம் ஆற்றுவேன்?' எனத் தனது ஆற்றாமை மிகுதி தோன்றத் தலைமகள் கூறியது. - ஒளவையார் |
43. பாலை |
'செல்வார் அல்லர்' என்று யான் இகழ்ந்தனனே; |
||
'ஒல்வாள் அல்லள்' என்று அவர் இகழ்ந்தனரே: |
||
ஆயிடை, இரு பேர் ஆண்மை செய்த பூசல், |
||
நல்அராக் கதுவியாங்கு, என் |
||
அல்லல் நெஞ்சம் அலமலக்குறுமே. |
உரை | |
பிரிவிடை மெலிந்த கிழத்தி சொல்லியது. - ஒளவையார் |
80. மருதம் |
கூந்தல் ஆம்பல் முழு நெறி அடைச்சி, |
||
பெரும் புனல் வந்த இருந் துறை விரும்பி, |
||
யாம் அஃது அயர்கம் சேறும்; தான் அஃது |
||
அஞ்சுவது உடையளாயின், வெம் போர் |
||
நுகம் பட கடக்கும் பல் வேல் எழினி |
||
முனை ஆன் பெரு நிரை போல, |
||
கிளையொடு காக்க, தன் கொழுநன் மார்பே. |
உரை | |
தலைமகட்குப் பாங்காயினார் கேட்பப் பரத்தை சொல்லியது. - ஒளவையார் |
91. மருதம் |
அரில் பவர்ப் பிரம்பின் வரிப் புற விளை கனி |
||
குண்டு நீர் இலஞ்சிக் கெண்டை கதூஉம் |
||
தண் துறை ஊரன் பெண்டினை ஆயின், |
||
பல ஆகுக, நின் நெஞ்சில் படரே! |
||
ஓவாது ஈயும் மாரி வண் கை, |
||
கடும் பகட்டு யானை, நெடுந் தேர், அஞ்சி |
||
கொன் முனை இரவு ஊர் போலச் |
||
சில ஆகுக, நீ துஞ்சும் நாளே! |
உரை | |
பரத்தையர்மாட்டுப் பிரிந்த தலைமகன் வாயில் வேண்டிப் புக்கவழி, தன்வரை த்தன்றி அவன் வரைத்தாகித் தன் நெஞ்சு நெகிழ்ந்துழி, தலைமகள் அதனை நெருங்கிச் சொல்லியது; பரத்தையிற் பிர |
99. முல்லை |
உள்ளினென் அல்லெனோ யானே? உள்ளி, |
||
நினைந்தனென் அல்லெனோ பெரிதே நினைந்து, |
||
மருண்டனென் அல்லெனோ, உலகத்துப் பண்பே? |
||
நீடிய மராஅத்த கோடு தோய் மலிர் நிறை |
||
இறைத்து உணச் சென்று அற்றாங்கு, |
||
அனைப் பெருங் காமம் ஈண்டு கடைக்கொளவே. |
உரை | |
பொருள் முற்றிப் புகுந்த தலைமகன். 'எம்மை நினைத்தும் அறிதிரோ?' என்ற தோழிக்குச் சொல்லியது. - ஒளவையார் |
102. நெய்தல் |
உள்ளின், உள்ளம் வேமே; உள்ளாது |
||
இருப்பின், எம் அளவைத்து அன்றே; வருத்தி |
||
வான் தோய்வற்றே, காமம்; |
||
சான்றோர் அல்லர், யாம் மரீஇயோரே. |
உரை | |
'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி, 'யான் யாங்ஙனம் ஆற்றுவேன்?' என்றது.- ஒளவையார் |
158. குறிஞ்சி |
நெடு வரை மருங்கின் பாம்பு பட இடிக்கும் |
||
கடு விசை உருமின் கழறு குரல் அளைஇக் |
||
காலொடு வந்த கமஞ் சூல் மா மழை! |
||
ஆர் அளி இலையோ நீயே? பேர் இசை |
||
இமயமும் துளக்கும் பண்பினை; |
||
துணை இலர், அளியர், பெண்டிர்; இஃது எவனே? |
உரை | |
தலைமகன் இரவுக்குறி வந்துழி, அவன் கேட்பத் தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது.- ஒளவையார். |
183. முல்லை |
சென்ற நாட்ட கொன்றைஅம் பசு வீ |
||
நம் போல் பசக்கும் காலை, தம் போல் |
||
சிறு தலைப் பிணையின் தீர்ந்த நெறி கோட்டு |
||
இரலை மானையும் காண்பர்கொல், நமரே?- |
||
புல்லென் காயாப் பூக் கெழு பெருஞ் சினை |
||
மென் மயில் எருத்தின் தோன்றும் |
||
புன் புல வைப்பிற் கானத்தானே. |
உரை | |
பருவ வரவின்கண், 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.- ஒளவையார் |
200. நெய்தல் |
பெய்த குன்றத்துப் பூ நாறு தண் கலுழ் |
||
மீமிசைத் தாஅய், வீசும் வளி கலந்து, |
||
இழிதரும் புனலும்; வாரார்-தோழி!- |
||
மறந்தோர் மன்ற; மறவாம் நாமே- |
||
கால மாரி மாலை மா மலை |
||
இன் இசை உருமினம் முரலும் |
||
முன் வரல் ஏமம் செய்து அகன்றோரே. |
உரை | |
பருவ வரவின்கண் ஆற்றாளாகிய தலைமகட்குத் தோழி, 'பருவம் அன்று; வம்பு'என்ற வழி, தலைமகள் சொல்லியது. - ஒளவையார். |
364. மருதம் |
அரில் பவர்ப் பிரம்பின் வரி புற நீர்நாய் |
||
வாளை நாள் இரை பெறூஉம் ஊரன் |
||
பொன் கோல் அவிர் தொடித் தற் கெழு தகுவி |
||
எற் புறங்கூறும் என்ப; தெற்றென |
||
வணங்கு இறைப் பணைத் தோள் எல் வளை மகளிர் |
||
துணங்கை நாளும் வந்தன அவ் வரைக் |
||
கண் பொர, மற்று அதன்கண் அவர் |
||
மணம் கொளற்கு இவரும் மள்ளர் போரே. |
உரை | |
வேறு ஒரு பரத்தை தன்னைப் புறங்கூறினாள் எனக் கேட்ட இற்பரத்தை அவட்குப் பாங்காயினார் கேட்பக் கூறியது. - ஒளவையார் |
388. குறிஞ்சி |
நீர் கால்யாத்த நிரை இதழ்க் குவளை |
||
கோடை ஒற்றினும் வாடாதாகும்; |
||
கவணை அன்ன பூட்டுப் பொருது அசாஅ |
||
உமண் எருத்து ஒழுகைத் தோடு நிரைத்தன்ன |
||
முளி சினை பிளக்கும் முன்பு இன்மையின், |
||
யானை கைம்மடித்து உயவும் |
||
கானமும் இனிய ஆம், நும்மொடு வரினே. |
உரை | |
தலைமகள் உடன்போக்கு நேர்ந்தமை உணர்ந்த தலைமகன், சுரத்து வெம்மையும்,தலைமகள் மென்மையும் குறித்து, செலவு அழுங்கலுறுவானைத் தோழி அழுங்காமற் கூறியது. - ஒளவையார் |