Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - I
4)
விரவுப் பெயர் என்றால் என்ன? இரு சான்றுகள் தருக.
விரவுப் பெயர் என்பது உயர்திணைக்கும் அஃறிணைக்கும் பொதுவாக வழங்கும் பெயர் ஆகும்,. (எ.டு) சாத்தன், சாத்தி. இவ்விரு சொற்களும் உயர்திணையில் முறையே ஒருவனையும், ஒருத்தியையும் குறிக்க வழங்கின. இதே சொற்கள் அஃறிணையில் முறையே எருதையும் பசுவையும் குறிக்கவும் வழங்கின. இவ்வாறு இருதிணைக்கும் பொதுவாக வழங்கும் பெயர்களே விரவுப் பெயர்கள் எனப்பட்டன.