தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பJ-பயிற்சி1

 • பயில்முறைப் பயிற்சி -1

  பாரதியார் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகள்

  1882
  டிம்பர் 11

  பிறப்பு

  1887

  தாயார் இலட்சுமியின் மறைவு

  1889

  தந்தையார் வள்ளியம்மாளை இரண்டாம் தாரமாக மணந்தது

  1893

  'பாரதி' பட்டம் பெறுதல்

  1894

  திருநெல்வேலி இந்துக்கல்லூரி உயர்நிலைப் பள்ளியில் சேர்தல்

  1897

  ஐந்தாம் படிவப் படிப்பை முடித்து இந்துக்கல்லூரி உயர் நிலைப்
  பள்ளியை விட்டு வெளிவருதல்

  1897
  ஜூன் 15

  செல்லம்மாவுடன் திருமணம்

  1898
  ஜூன்

  தந்தையார் சின்னசாமி ஐயரின் மரணம்
  காசி நகருக்குச் செல்லல்
  இந்து கலாசாலையில் வடமொழியும் இந்தியும் படித்தல்
  அலகாபாத் பல்கலைக்கழகப் 'பிரவேச'ப் பரிட்சையில் தேறுதல்
  சுதேசியத்தில் பற்றுத் தோன்றுதல்

  1902

  எட்டயபுரம் திரும்புதல்

  சமஸ்தான உத்யோகம் பார்த்தல்

  'ஷெல்லிதாசன்' என்ற புனைபெயரில் கட்டுரை எழுதுதல்

  1904

  சமஸ்தானப் பணியைத் துறந்து, மதுரை வருதல்

  ஜூன்

  'தனிமை இரக்கம்' என்ற பாடல் 'விவேகபாநு' என்ற பத்திரிகையில்
  அச்சாதல்.

  ஆக8-நவ.11

  மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராகப்
  பணியாற்றுதல்

  நவம்பர்
  சென்னை 'சுதேசமித்ரன்' ஆசிரியர் குழுவில் சேர்தல் மகள் -
  தங்கம்மாள் பிறப்பு
  1905
  நவம்பர்

  'சக்கரவர்த்தினியில் 'வந்தேமாதரப்' பாடல் மொழி
  பெயர்ப்பை விளக்கக் குறிப்போடு வெளியிடுதல்

  1905

  காங்கிரஸ் மாநாடு - காசி

  1906

  காங்கிரஸ் மாநாடு - கல்கத்தா ; தாதாபாய்
  நவுரோஜி'சுயராஜ்ய' முழக்கம் இடுதல்

  1906
  ஏப்ரல்

  'இந்தியா' பத்திரிகைத் துவக்கம்

  1907
  டிம்பர்

  சூரத் காங்கிரஸ் மாநாடு - திலகரின் தீவிரவாதக்
  கொள்கையில் பாரதிக்கு ஈடுபாடு ஏற்படுதல்

  1908
  ப்டம்பர்

  பாரதியார் புதுச்சேரி சென்று அடைதல் -

  'இந்தியா' பத்திரிகை நிறுத்தம்

  அக்டோபர்

  'இந்தியா' மீண்டும் வெறிவருதல்

  இளைய மகள் சகுந்தலாவின் பிறப்பு

  1912

  'குயில்பாட்டு 'கண்ணன் பாட்டு', 'பாஞ்சாலி சபதம்', பகவத் கீதை
  உரை, பதஞ்சலி யோக சூத்திர உரை ஆகியவை எழுதப்பட்டன.

  1913

  'கனகலிங்கம்' என்ற ஆதிதிராவிடச் சகோதரருக்குப் பூணூல்
  அணிவித்தது

  1918
  நவம்பர் 20

  பாண்டிச்சேரியிலிருந்து வெளிவருதல் - ஆங்கிலேயரால்
  சிறையிடப்படல்

  டிம்பர் 14

  விடுதலை ஆதல், கடையத்தில் குடி ஏறல்.

  1919
  மே 2

  எட்டயபுரம் ஜமீனுக்கு உதவி வேண்டிச் சீட்டுக்கவி எழுதியது.

  1919
  மார்ச்

  காந்தியடிகளுடன் இராஜாஜி இல்லத்தில் சென்னையில் சந்திப்பு - காந்தியடிகளை வாழ்த்திப் பாடுதல்

  1920
  ஜூன்

  'இஸ்லாம் மார்க்கத்தின் மகிமை' : சொற்பொழிவு.

  நவம்பர்

  சென்னை 'சுதேசமித்திரனில்' மீண்டும் வேலை,
  சென்னையில் குடி ஏறுதல்

  1921
  செப்டம்பர் 11

  மகாகவியின் மரணம்

  முன்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 18-11-2019 11:26:19(இந்திய நேரம்)