Primary tabs
-
3.0 பாட முன்னுரை
புராண நாடகங்கள் படைக்கப்பட்டதைத் தொடர்ந்து வரலாற்று நாடகங்கள் படைக்கப்பட்டன. புராணக் கதைகளையொத்த வரலாற்று நிகழ்ச்சிகள் சிலவற்றைச் சுவையாகக் கோத்து வரலாற்று நாடகம் படைக்கப்பட்டது. அதில், நடந்த நிகழ்ச்சிகளுடன் கற்பனையான நிகழ்ச்சிகளையும் கலந்து படைத்தார்கள். கல்வெட்டிலும், இலக்கியத்திலும் வரலாற்று நூல்களிலும் காணப்படும் பண்டைய வரலாறுகளும் இடைக்கால வரலாறுகளும் இந்நாடகங்களுக்கு அடிப்படையாகின்றன. இந்நாடகங்களில் வரலாற்றுப் பெயர்கள் அப்படியே பயன்படுத்தப் படுகின்றன. கற்பனைப் பாத்திரங்களுக்கும் பொருத்தமான பெயர்கள் இடப்படுகின்றன. அரசர்கள் காலத்தில் நடந்ததாகப் படைக்கப்படும் கற்பனையான வரலாற்று நாடகங்களும் படைக்கப்படுகின்றன. தேசிய இயக்கம், திராவிட இயக்கம் முதலான இயக்கங்களின் கருத்துப் பரப்பலுக்காகவும் வரலாற்று நாடகங்கள் படைக்கப்பட்டுள்ளன. இவை பற்றிய செய்திகள் இப்பாடத்தில் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன.