Primary tabs
-
3.6 தொகுப்புரை
வரலாற்று நாடகங்கள் முற்காலத்தில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளை அறிய உதவுகின்றன. வரலாற்றைக் கற்றுக்கொள்ள உதவுகின்றன. வரலாற்று மூலங்களுக்கு உருக்கொடுத்து வரலாற்று மனிதர்களுக்கும் உருக்கொடுத்துக் கருத்தூட்டுகின்றன. அறிவுறுத்தவும், பொழுதுபோக்கவும் உதவுகின்றன. தேசிய எழுச்சிக்கும், சமூக இயக்கங்களின் கருத்துப் பரப்பலுக்கும் தமிழ் இனத்தின் சிறப்பைப் புலப்படுத்தவும் தமிழகம் அல்லாத பகுதிகளின் நிகழ்வுகளைக் காட்டவும் பெரியவர்களின் வரலாறுகளை உணர்த்தவும் வரலாற்று நாடகங்கள் பயன்பட்டிருக்கின்றன. மேடை அமைப்பின் மூலமும், ஒப்பனையின் மூலமும், மொழியின் மூலமும் கடந்த காலத்தை நம்முன் நிறுத்தி வெற்றி பெற்றிருக்கின்றன.