Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - I
7)காதல் பற்றி இரு காவியங்களின் கருத்தினைக் குறிப்பிடுக.‘காதல் துணைவனை அடையாவிட்டால் குவளை தின்று இறந்துபடுவேன்’ என்று தமிழச்சியில் பாப்பாத்தி எனும் பாத்திரப் படைப்பின் மூலம் காதலின் ஆழத்தை வெளிப்படுத்துகிறார், கவிஞர்.
வலைப்பட்ட மீனொப்ப அவள் மைக் கண்ணில்
அகப்பட்ட மனமடக்கி நடந்திட்டானேஎனக் காதலியின் கண்வீச்சில் விழுந்த காதலனின் நிலையை எடுத்துச் சொல்கிறார்.