தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை



  •  

    தன் மதிப்பீடு : விடைகள் - II

    1)

    கவிஞர் வாணிதாசனின் தமிழ்மொழிப் பற்றினைக் குறிப்பிடுக.

    காதலர்களின் களவின்பமும் தமிழின்பமும் ஒன்று என்பதைச் சுட்டிக் காட்டுகிறார்.

    தலைகாலே தெரியாது காதலர்கள்
    தனித்தமிழின் இன்பத்தைத் துய்ப்பது போல
    நிலையற்றுக் கிடந்தார்கள் தோட்டத்துள்ளே

    என்று தமிழச்சியில் தனித்தமிழின் இன்பத்தைப் புகழ்கிறார்.

    தமிழ் இன்பம் அவளுதடு என்றும், தமிழைப் போலத் தித்திக்கும் கொடிமுல்லையாளே ! என்று கொடிமுல்லையிலும் தமிழ்மொழியின் மேன்மையினையும் உயர்வினையும் குறிப்பிடுகிறார்.



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 10:06:31(இந்திய நேரம்)