தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை






  •  

    தன் மதிப்பீடு : விடைகள் - II

    3)

    வாணிதாசன் ஓர் இயற்கைக் கவிஞர் என்பதை நிறுவுக.

    வாணிதாசன் இயற்கையை மனிதவாழ்விற்கு உறுதுணையாக அமைத்துள்ளார்.

    ‘மழைபட்ட மதியைப் போன்றாள்!’ என்று கொடிமுல்லையையும், மழைபட்ட நிலா முகத்தாள்! என்று தமிழச்சியையும் பற்றிப் பேசுகிறார்.

    நல்லபாம்பு என நெளிந்து
    நழுவிடும் ஓடை
    நாணலின் பூவை யொத்த
    நரைமயிர்ப் பாட்டி

    என இயற்கைப் பொருள்களை உவமையோடு விளக்குவதிலிருந்து கவிஞருக்கு உள்ள இயற்கை ஈடுபாட்டினைப் புரிந்து கொள்ள முடிகிறது.



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 10:06:38(இந்திய நேரம்)