Primary tabs
-
- மணிப்புரியில் அமையும் தாண்டவ நடனம் குறித்து எழுதுக.
பெண்கள் ஆடும் நடனம் இலாசிய முறையில் மிகவும் நளினமாகக் காணப்படும் ஆண்கள் புங்சோலோம் என்ற தாண்டவ முறையைச் சார்ந்த நடனத்தை நிகழ்த்துவர். இது மிகவும் உத்வேகம் நிறைந்ததாக இருக்கும். இந்த நடனத்தைக் கையில் போல்கி என்ற மத்தளத்தை இசைத்த படியே ஆடுவர். மற்றொரு தாண்டவமுறை நடனம் மணிப்புரி நடனத்தில் காணப்படுகிறது. இது கர்தால் சோலோம் என்று அழைக்கப்படுகிறது. இந்நடனத்தைக் கையில் பெரிய தாளத்தைத் தட்டிய படியே ஆடுவர். இந்தத் தாண்டவ நடனம் வைணவ முறைப்படி அமைந்திருக்கும்.