Primary tabs
-
- மோகினி ஆட்டத்தில் இடம் பெறும் அலங்கார (ஒப்பனை) முறை குறித்து எழுதுக.
பரத நாட்டியத்தில் அமையும் முக ஒப்பனை போல மோகினி ஆட்டத்திலும் அமையும். ஆடை வெண்மை நிறத்தில் அமையும். மோகினியைப் போலத் தழையத் தழைய ஆடை அணியப்படும். சேர அரசகுல பெண்மணிகளைப் போல பக்கவாட்டில் கொண்டை அணியப்படுகிறது. அதைச் சுற்றிப் பூ அணியப் படுகிறது. பரத நாட்டியத்தைப் போலக் கை, கழுத்து போன்ற உறுப்பு ஆபரணங்களும் காலில் சலங்கையும் அணியப்படும்.