55. சவரர் புளிஞர்
வளைந்தது
|
இதன்கண்: அப்
பாலைநிலத்தே வாழும் மாக்களாகிய சவரரும் புளிஞரும் அவ்விரவு கழிந்த பின்னர் வழியிலே
இறந்து கிடக்கின்ற பத்திராபதியையும், அதன் பக்கத்தே மக்களியங்கிய சுவடுகளையும்
கண்டு இவ்வழியே செல்வார் சிலருளர் என்று கருதி அடிச்சுவடுபற்றி வந்து
உதயணன் முதலியோரைக் காண்டலும், உதயணனோடு போர்செய்தலும், ஆற்றாது தோற்றுறப்
பின்னரும், அவனை விட்டுச் செல்லவும் அணுகவும் மாட்டாராய் அவ்விலவஞ் சூழலைச் சூழ்ந்து
வளைத்துக்கொண்டு நின்றதும் கூறப்படும். |
|
|
புலர்ந்த காலைப் பூங்கழல்
குருசில்
மலர்ந்த பொய்கையுள் மணிநிறத்
தெண்ணீர்க்
கொழுமலர்த் தடக்கையில் கூட்டுபு
கொண்டு
குழவி ஞாயிற்று எழில்இகந்து
எள்ளும்
5 திருமுக மருங்கில்
செருமீக் கூரி ஒள்இழை
மகளிர் உள்ளம் கவற்றும்
செந்தா மரைக்கண் கழீஇ மந்திரத்து
அந்தி கூப்பித் தென்புலக்கு இறைஞ்சித் |
உரை
|
|
|
தமரின்
பிரிந்ததன் தனிமையை நினைஇ
10 அமரிய தோழி ஆகத்து அசைந்து
சுடர்முகம் புல்லெனப் படரொடும் அயர்ந்து
வேனில் வள்ளியின் மேனி வாடி
உள்ளம் கனலும் ஒள்ளிழை மாதரைக்
குற்ற நலத்துக் குறிப்புநனி காட்டி
15 உற்ற வெந்நோய் ஓம்பென உற்ற
காஞ்சன மாலையை ஆங்கனம் ஆருளி |
உரை |
|
|
வருபடைக்கு அகன்ற வயந்தகன்
வருவழிப்
பொருபடை அண்ணல் பொழில்வயின்
இருப்பக்
கடுவிசைக் கனலி சுடுகதிர்
மருங்கில் 20 குடுமி
நெற்றிக் கூர்உளி
அன்ன
வல்லாய் வயவன் வறண்மரத்து
உச்சிப்
பல்கால் குரைத்தது பகல்படை
தருமெனப்
பாட்டில் கூறக் கேட்டனன் ஆகி |
உரை
|
|
|
வெண்மதி
நெடுங்குடை வேற்றவன் படையொடு 25
நுண்மதி அமைச்சன் உள்மறைந்து
ஒடுங்கி
மராவும் மாவும் குராவும்
கோங்கும்
தண்ணிழல் பொதும்பர்க் கண்அழல்
காட்டும்
காழ்அமை கழைத்தொடர்க் கடும்பரிப்
போர்வைத்
தாழ்அமை பெரும்பொறித் தச்சுவினைப்
பொலிந்த 30 அரக்கூட்டு
அம்புகர் மரக்கூட்
டியானையைச்
செறுவுபு நிறீஇய செய்கை
ஓராது
ஓறிபடை யாளரோடு உறுமுரண்
செய்யக்
காழ்த்த காலைக் கீழ்த்திசை முன்பகல் |
உரை
|
|
|
அன்றுஅவண்
பாடிய அணிவரி வயவன் 35
இன்றிவண் இன்னே இகல்படை
தருதல்
பொய்த்தல் இன்றி மெய்த்த
தாம்என
அங்குபடு புள்குரல் ஆண்தகை
அஞ்சி
வெங்கணை திருத்தி வில்இடந்
தழீஇ
இரும்புஇடை இட்ட பெரும்புடைக்
கச்சையன் 40 வளிசுழற்று
அறறாஅ முளிமரக்
கானத்து
என்கொல் நிகழும் ஏதம்
இன்றென
நெஞ்சோடு உசாவும் சிந்தையன்
ஆகி
வெஞ்சின வீரன் நின்ற காலை |
உரை
|
|
|
மடப்பிடி
வீழ்ந்த மணிமலைச் சாரல் 45
அடக்கரும் சீறூர் அரண்அக
உறையுளர்
கணங்கொள் தலைவனைக் கைக்கொண்டு
இயங்கா
அணங்குஅரும் பெருஞ்சாத்து அவிய
நூறிப்
பல்விலைப் பண்டம் கவர்ந்துபயம்
அறியார்
சில்விலைக்கு இடூஉம் செல்லா
வாழ்க்கையர் 50
சுரஞ்செல் வம்பலர் அரும்பதம்
மடக்கி
மாண்உறி யாத்த வாணத்
தானையர்
அடுகணை மறவர் அகல்இலை
ஓமை
நெடுநிலைத் திரள்தாள் நேர்துணித்து
அதர்வைக்
கொடிபுரை கயிற்றொடு கொளுத்தினர் சமைப்ப |
உரை
|
|
|
55 வடியின் அன்ன
வாள்அரித்
தடம்கண்
பைங்குழை மகளிர் பல்காழ்க்
கலையோடு
அங்குழைச் செயலைத் தண்தழை
உடீஇக்
காலின் இயங்குநர் கல்குழிக்
கொளினும்
நூலின் இயன்றவை நோக்கார்
சாபமென்று 60 ஆடூஉவும்
மகடூஉவும் மாடும் அறியார் |
உரை
|
|
|
காடுதேர் முயற்சியர் கைப்பட்
டோர்களைப்
பாடல் பாணிப் பல்லிசை
கேட்டும்
ஆடுஎன வணங்கில் கருந்தலை
துமித்தும்
வீளை யோட்டின் வெருவ எய்துஅவர்
65 ஊளைப் பூசலோடு ஆடல்கண்டு
உவந்தும் காட்டுஉயிர்
காணார் கைப்பயில்
குறியொடு
வேட்டன செய்யும் வேட்டுவினைக்
கடுந்தொழில்
கவர்கணை வாழ்க்கைச் சவரர் புளிஞர் |
உரை
|
|
|
காலை
எழுந்து கணம்கொண்டு ஈண்டிச்
70 சோலைப் போதகச் சுவடுஉறுத்து
உழல்வோர்
காஅட்டுப் பிடிமற்று அன்றிது
கருதின்
நாஅட்டுப் பிடியே நடந்தது
தான்என
முதிர்புலால் நாற்றமொடு முன்முன்
வீசி
உதிர வழியே அதிர ஓடிப்
75 பிடியது வீழ்ச்சியும் பெண்பால்
சுவடும்
அடுதிறல் ஆடவர் அற்றமும்
பிறவும்
படியின் ஆய்ந்து கடுகுவனர்
ஓடி
வெள்ளிடை வெண்மணல் மிதித்த
சுவடுதொறும்
புள்அடி ஒழுக்கம் புரிவனர் நோக்கி |
உரை
|
|
|
80 நெருநல் நீடிருள்
நீங்குநர் சுவடுஇவை
அருமை உடைத்துஅவர்த் தலைப்படல்
நமக்கென
அடியுறின் அடையும் அம்புடை
எயினர்
கடிகை வெள்ளிலும் கள்ளி
வற்றலும்
வாடிய உவலொடு நீடுஅதர்
பரப்பி 85 உழைவயின்
தரியாது முரைவயின்
ஒடுங்கிய
ஆறுஅலை இளையரை ஆண்மை
எள்ளி
வேறுஇனி நும்மொடு விளிகநும்
களவுஎனச்
சேறல் வலியாச் செய்கை நோக்கி |
உரை
|
|
|
வாய்ச்சிறு புதுப்புள் வீச்சுறு விழுக்குரல்
90 கேட்டுப்பொருள் தெரியுமோர் வேட்டுவ
முதுமகன்
பெருமகன் னென்னப் பெறலரும்
கலத்தோடு
ஒருமகன் உளவழி எதிர்த்தும்
அம்மகன்
நடுங்குதுயர் உறுத்தும் கடுங்கண்
ஆண்மையன்
ஆண்மை அழிய நாண்மீக் கூரி
95 மெய்ப்பொருள் துணர்ந்து கைப்படும்
நமக்கெனக்
காட்டக மருங்கின் அல்லது
மற்றவர்
நாட்டகம் புகுதல் நன்கிருள்
கழியினும்
இல்லை எழுகெனச் செல்வோர் முன்னர்ப் |
உரை
|
|
|
புரக்கூட்டு அமைந்த வரக்கூட்டு
அரத்தம் 100 பவளத் துணியில்
பசுமையொடு கிடப்ப
இன்அணிப் புக்கோர் இவ்வழி
அல்லது
மற்றவர் எங்கும் மறைந்திலர்
காண்கெனச்
செல்வோர் ஒருங்குடன் வல்லையும்
வழியும்
வான்மரப் பொதும்பும் கானமும்
கடறும் 105 முழைவளர்
குன்றும் கழைவளர்
கானமும்
பயம்பும் பாழியும் இயங்குவனர்
வதியும்
முதுமரப் பொத்தும் புதுமலர்ப்
பொய்கையும்
இனையவை பிறவும் அனையவர்
உள்வழிச்
செருக்கயல் உண்கண் சீதையைத் தேர்வுழிக்
110 குரக்கினத்து அதன்ன பரப்பினர் ஆகிப் |
உரை
|
|
|
பிடிமுதல் கொண்டுமலர் அடிமுதல்
ஒற்றிச்
செல்வோர் கதுமெனச் செம்மலைக்
கண்டே
கல்எனத் துவன்றிக் கார்கிளர்ந்
ததுபோல்
ஆர்ப்பும் வீளையும் அவ்வழிப்
பரப்பிக் 115 கார்க்கலைக்
கோட்டொடு ஆர்ப்பொலி
மயங்கி
அரவச் செய்கையர் வெருவரத் தாக்கப் |
உரை
|
|
|
பல்பனி பரந்த சில்அரி
மழைக்கண்
நச்சுஉயிர்ப் பளைஇய அச்ச
நோக்கமொடு
விம்முவனள் நடுங்கும் பொம்மல்
ஓதியை 120 மாஞ்சினை
இளந்தளிர் மணிநிற
மேனிக்
காஞ்சன மாலாய் காவல்
போற்றுமதி
அப்பால் புகுதரும் அற்றம்
இன்மையின்
இப்பால் வருவநர் இன்னுயிர் உண்கெனக் |
உரை
|
|
|
கைச்சிலை வளைத்துக் கணைநாண்
கொளீஇ 125 முற்றிய கோங்கின்
முழுத்தாள்
பொருந்தி
ஒற்றுபு நோக்கும் ஒற்றை
யாளன்
வார்கணை செவியுற வாங்கி
மற்றவர்
ஆருயிர் வௌவஅதன் தாள்முதல்
பொருந்தி
உடும்புஎறிந் ததுபோல் கடுங்கணை
முள்க 130 விட்ட
வேந்தன் வில்தொழில் கண்டும் |
உரை
|
|
|
கண்டுகை விடுதல் கருமம்
அன்றென
விண்டுஅலர் இலவத்து அண்டைசார்ந்து
அவனைக்
கண்ட வேட்டுவர் தண்டாது
நெருக்கி
மையணி இரும்பிடி வீழ மற்றுநீ 135
உய்வல்என் றெண்ணி ஒளித்தனை
போந்தனை
எவ்வழிப் போதிநின் இன்னுயிர்
உண்குவம்
யாரை நீஎமக்கு அறியக்
கூறென
வீர வெம்மொழி நீரல பயிற்றி |
உரை
|
|
|
உடுஅமை பகழ் ஒருங்குடன் தூவ
140 விடுகணை விடலை வில்லின்
விலக்கி
வதிபயின்று அடைந்த மறவரை
அதிரக்
கைவயின் கடுங்கணை ஒவ்வொன்று
கொண்டவர்
மெய்வயின் கழிந்து வியன்நிலத்து
இங்க
வீரருள் வீரன் விசைபெற
விடுதலின் 145 வீர
வேட்டுவர் சார்தல் ஆற்றார் |
உரை
|
|
|
கோல
உருவொடு குன்றிடைப்
போந்தஓர்
காலன் கொல்இவன் கானத்
தோர்க்கெனப்
பன்முகத் தானும் பற்றடைந்து
தன்னவன்
வின்முகம் புகாஅர் வேட்டுவர்
அஞ்சிப் 150 புண்கூற்
றாளனைள் உள்கூற்
றாகி
அழித்தனை கொணர்ந்துஎனப் பழித்தனர்
கழறி
உளைப்பொலி மான்தேர் உதயண
குமரனை
வளைத்துநின் றனரால் வலிப்பது தெரிந்தஎன். |
உரை
|
|