Primary tabs
தன்மதிப்பீடு : விடைகள் - I
1.சூளாமணிக் காப்பியத்தின் பெயர்ப் பொருத்தத்தை எடுத்துரைக்க.
சூளாமணி என்ற சொல் காப்பியத்தில் நான்கு இடங்களில் இடம் பெறுகின்றது. அவனி சூளாமணி என்ற பாண்டியன் காலத்தில் இதன் ஆசிரியர் வாழ்ந்ததாலும், சூளாமணி காப்பியத் தலைவன் திவிட்டன் தந்தை பயாபதி ‘உயர்ந்து உலகின் முடிக்கோர் சூளாமணியானான்’ எனக் காப்பியம் பேசுவதாலும் இப்பெயர் பெற்றது.