Primary tabs
தன்மதிப்பீடு : விடைகள் - II
4.நாக குமார காவிய ஆசிரியர் அருகக் கடவுளை எவ்வாறு போற்றுகிறார்?
அறவன்நீ கமலன்நீ ஆதி நீயே
ஆரியன்நீ சீரியன்நீ அனந்தன் நீயே
திரிலோக லோகமொடு தேயன் நீயே
தேவாதி தேவன் என்னும் தீர்த்தன் நீயே
எரிமணிநற் பிறப்புடைய ஈசன் நீயே
இருநான்கு குணமுடைய இறைவன் நீயே
திரிபுவனம் தொழுது இறைஞ்சும் செல்வன் நீயே
சீர்வர்த்த மானன்எனும் தீர்த்தன் நீயேஎன்று போற்றுகிறார்.