Primary tabs
- தன் மதிப்பீடு : விடைகள் - II - 4) - உமறுப் புலவரின் குறிஞ்சி நில வருணனையின் சிறப்பு யாது? - குறிஞ்சி நிலத்தில் தினைப் பயிர்கள் இருந்தன. தினையின் இலைகள் நீண்டவை. அவை கனமான கதிர்களால் வளைந்தன. குறத்தியர் கதிர்களை உண்ணவரும் கிளிகளை விரட்டினர். கல்லால் எறிந்தனர்; பாடி விரட்டினர். கிளிகளும் கீச் என ஒலி எழுப்பின. இந்த இரு ஓசைகளையும் பாடலாக எண்ணிக் காட்டுப் பசுக்கள் உறங்கின. 
 
						 
						 
