Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - I
1.பால்பகா அஃறிணைப் பெயர்கள் - விளக்குக.
இன்ன பால் என்று பிரித்துச் சொல்ல முடியாத பெயர்ச்சொற்கள் பால்பகா அஃறிணைப் பெயர்கள் எனப்படும்.
ஒன்றன் பாலைக் காட்டும் ‘து’ விகுதியையும், பலவின் பாலைக் காட்டுகின்ற வை, அ, கள் என்னும் விகுதிகளுள் ஒன்றையும் பெறாத அஃறிணைப் பெயர்கள் ஒன்றன் பாலுக்கும் பலவின் பாலுக்கும் பொதுவாய் வரும்.
(எ.டு.) குதிரை, மாடு, மரம், பறவை