Primary tabs
1.5 தொகுப்புரை
இதுகாறும் நீங்கள் தமிழகத்திற்கு ஐரோப்பியர்கள் ஏன் வந்தனர் என்றும், அவ்வாறு வந்த ஐரோப்பியர்கள் யார் யார் என்றும் நன்கு படித்து உணர்ந்திருப்பீர்கள்.
ஐரோப்பியர்களுக்குள்ளே சண்டையும், சச்சரவும் ஏற்பட்டுக் கொண்டிருந்தன என்பது பற்றியும் அறிந்து கொண்டீர்கள்.
இறுதியில் ஆங்கிலேயரும், பிரெஞ்சுக்காரர்களுமே ஆதிக்கம் பெற்றுத் திகழ்ந்தனர் என்று உணர்ந்து கொண்டிருப்பீர்கள்.
ஐரோப்பியர்களின் வருகையால் சோழ மண்டலக் கடற்கரைப் பகுதியில் போர்கள் மூண்டன என்றும், அவையே முதல் கருநாடகப் போர் என்றும், இரண்டாம் கருநாடகப் போர் என்றும் நன்கு படித்துப் புரிந்து கொண்டிருப்பீர்கள்.
ஐதர் அலியும், அவன் மகன் திப்பு சுல்தானும் ஆங்கிலேயரோடு செய்த மைசூர்ப் போர்களைப் பற்றி விரிவாக அறிந்து கொண்டிருப்பீர்கள்.
மேலும் தமிழகத்தில் வீரபாண்டியக் கட்டபொம்மன், மருது பாண்டியர், தீர்த்தகிரி போன்றோர் கிளர்ச்சியில் ஈடுபட்டு ஆங்கிலேயரை எதிர்த்தனர் என்பது பற்றியெல்லாம் படித்துணர்ந்து இருப்பீர்கள்.
தன் மதிப்பீடு : வினாக்கள் - II