Primary tabs
-
பாடம் - 1
A03141 ஐரோப்பியர் வருகை
இந்தப் பாடம் என்ன சொல்கிறது?
இந்தியாவிற்கு ஐரோப்பியர் வரக் காரணங்கள் என்ன என்பது பற்றி விளக்குகிறது.
ஐரோப்பியர்கள் தமிழகத்திற்கு வந்தவுடன் நடைபெற்ற போர்களைப் பற்றி விளக்குகிறது.
ஆங்கிலேய ஏகாதிபத்தியத்துக்கு எதிராகத் தமிழகத்தில் ஏற்பட்ட விடுதலைக் கிளர்ச்சிகள் பற்றி விளக்குகிறது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
- இப்பாடத்தின் மூலம் தமிழகத்திற்கு வந்த ஐரோப்பியர்கள் யார் யார் எனத் தெரிந்து கொள்ளலாம்.
- தமிழகத்துள் நுழைந்த ஐரோப்பியர்கள் தங்களுக்குள்ளேயே பகைமை கொண்டு போர் புரிந்தனர் என்பது பற்றி அறிந்து கொள்ளலாம்.
- கருநாடகப் போர்கள் பற்றியும், மைசூர்ப் போர்கள் பற்றியும் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
- தமிழகத்தில் வீரபாண்டியக் கட்டபொம்மன், மருதுபாண்டியர், தீர்த்தகிரி போன்றோர் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்துக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர் என்பது பற்றி அறிந்து கொள்ளலாம்.