Primary tabs
-
பாடம் - 6
A03146 விடுதலைக்குப் பின் தமிழகம்
இந்தப் பாடம் என்ன சொல்கிறது?
ஆங்கிலேயர் ஆட்சியின்போது இருந்த சென்னை மாநிலத்தின் நிலப்பரப்பு, விடுதலைக்குப் பின் எவ்வாறு பல மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டது என்பதை விளக்குகிறது.
இந்திய விடுதலைக்குப் பின் தமிழகத்தை யார் யார் ஆண்டனர் என்பது பற்றியும், அவர்கள் எவ்வாறு ஆட்சி நடத்தினர் என்பது பற்றியும் விளக்குகிறது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
- ஆங்கிலேயர் ஆட்சியில் தென்னிந்திய நிலப்பரப்பு, சென்னை என்று அழைக்கப்பட்டது என்பதை அறிந்து கொள்ளலாம்.
- இந்தியா விடுதலை அடைந்தபின் சென்னை மாநிலம், மொழிவாரியாகப் பல்வேறு மாநிலங்களாகப் பிரிக்கப்பட்ட வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
- விடுதலைக்குப் பின் தமிழகத்தை ஓமந்தூர். பி. இராமசாமி ரெட்டியார் முதல் இன்று வரை பதினொருவர் ஆண்டது பற்றி அறிந்து கொள்ளலாம்.
- இவர்களின் ஆட்சியில் என்னென்ன வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன என்பதை விரிவாகத் தெரிந்து கொள்ளலாம்.
- விடுதலைக்குப் பின் தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி, கல்வி வளர்ச்சி, தமிழ் இலக்கிய வளர்ச்சி ஆகியன எவ்வாறு அமைந்திருந்தன என்பதைப் பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.