தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU Courses-பாட முன்னுரை

  • 6.0 பாடமுன்னுரை

    தென்னிந்தியாவில் தற்போது உள்ள கேரளா, தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரா ஆகிய நான்கு மாநிலங்களின் பெரும்பாலான நிலப்பரப்புகளை உள்ளடக்கி, சென்னை மாநிலம் என்ற பெயரால் ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்து வந்தனர். இந்தியா விடுதலை அடைந்த பிறகு சென்னை மாநிலம் மொழி வாரியாகப் பல்வேறு தனித்தனி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டது.

    தமிழகத்தில் விடுதலைக்குப் பின் பொருளாதார வளர்ச்சியும், கல்வி வளர்ச்சியும் சிறப்பாக அமைந்தன. தமிழ் இலக்கிய வளர்ச்சியும் சீரிய முறையில் அமைந்திருந்தது.

    மொழிவாரியாகப் பிரிக்கப்பட்ட அம்மாநிலங்களில் ஒன்றான தமிழ் நாட்டினை, இந்தியா விடுதலை பெற்றதிலிருந்து பல்வேறு அரசியல் கட்சிகளைச் சார்ந்த முதல் அமைச்சர்கள் ஆண்டு வந்துள்ளனர். இவர்கள் ஆட்சியின்போது மக்கள் நலம் பேணும் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இவற்றை எல்லாம் இப்பாடம் விரிவாக விளக்கிக் கூறுகிறது.

புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 22:49:39(இந்திய நேரம்)