Primary tabs
-
5.0 பாட முன்னுரை
இப்பாடம், இருபதாம் நூற்றாண்டில் இந்திய அரசியலில் ஏற்பட்ட மாற்றங்கள், இந்தியாவில் தொடங்கப்பட்ட இயக்கங்கள், ஆங்கிலேய அரசு கொண்டு வந்த சீர்திருத்தத் திட்டங்கள் ஆகியவற்றைப் பற்றி விளக்கிக் கூறுகிறது.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி, நீதிக் கட்சி, சுயராஜ்ஜியக் கட்சி போன்ற கட்சிகள் எதற்காகத் தோன்றின என்பது பற்றியும் கூறுகின்றது.
பிராமணர்களின் ஆதிக்கம் வெகுவாக இருந்த காரணத்தால், பிராமணர் அல்லாத பிற வகுப்பினர்கள் முன்னேற்றம் அடையாமல் இருந்தமையால் அவர்களை மேம்படுத்த வேண்டித் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்ற ஒன்று தொடங்கப்பட்ட வரலாற்றைக் கூறுகிறது.
இந்திய விடுதலைக்காகப் போராடிய வ.உ.சி., பாரதியார், சுப்பிரமணிய சிவா, வாஞ்சிநாதன், திருப்பூர் குமரன் போன்ற தலைவர்களைப் பற்றி விரிவாகக் கூறுகிறது.