Primary tabs
-
பாடம் - 1
A04131 பதினோராம் நூற்றாண்டு
பதினோராம் நூற்றாண்டில் தமிழகத்தை ஆட்சி செய்த மன்னர்கள் சமயத்திற்குச் சிறப்பிடம் கொடுத்தனர். மேலும் இந்நூற்றாண்டில் கல்லாடம் போன்ற சிறந்த இலக்கிய நூல்கள் தோன்றின. யாப்பருங்கலம், யாப்பருங்கலக்காரிகை, வீரசோழியம் போன்ற இலக்கண நூல்கள் எழுதப்பட்டன. சிலப்பதிகாரம், திருக்குறள் போன்றவற்றிற்கு உரைநூல்கள் தோன்றின. நம்பியாண்டார் நம்பி திருமுறைகளைத் தொகுத்தார். இவை பற்றிய செய்திகளை இந்தப் பாடம் சொல்கிறது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
-
பதினோராம் நூற்றாண்டில் வெளியான நூல்கள் பற்றி அறிமுகம் செய்து கொள்ளலாம்.
-
மன்னர்களின் சமயப்பொறை பிற சமய நூல்கள் தோன்றக் காரணமானதை அறியலாம்.
-
சமய வளர்ச்சி, அச்சமய இலக்கியத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்ததைக் கண்டறியலாம்.
-
உரைகள் பல தோன்றிய காலக்கட்டம் இது என்பதை அறிந்து கொள்ளலாம்.
-
நம்பியாண்டார் நம்பி வாழ்ந்ததும், திருமுறைகளைத் தொகுத்ததும் இக்காலக் கட்டத்தில்தான் என்பதைக் காணலாம்
-