தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பன்னிரண்டாம் நூற்றாண்டு - இரண்டாம் பகுதி

 • பாடம் - 3

  A04133 பன்னிரண்டாம் நூற்றாண்டு - இரண்டாம் பகுதி

  இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

  இந்தப் பாடம் பன்னிரண்டாம் நூற்றாண்டின் இறுதியில், தோன்றிய இலக்கியங்கள், இலக்கண நூல்கள், சாத்திரங்கள் ஆகியவை பற்றிக் குறிப்பிடுகின்றது. குறிப்பாக, ஒட்டக்கூத்தர், ஒளவையார் போன்றோரது படைப்புகளைப் பற்றிய செய்திகளைக் கூறுகின்றது.

  சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லாரைப் பற்றிக் கூறுகிறது. வைணவர்களால் இயற்றப் பெற்ற உரைகளையும், தனியன்களையும் பற்றி எடுத்துரைக்கின்றது.

  மேலும், இக்காலக் கட்டத்தில் எழுதப்பட்ட பிரபந்தங்கள் குறித்தும் குறிப்பிடுகின்றது.

  இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?


  • ஒட்டக்கூத்தரின் படைப்புகளை அறிந்து கொள்ளலாம்.

  • சோழர் கால ஒளவையாரின் படைப்புகளைப் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

  • திருக்களிற்றுப்பாடியார், ஞானாமிர்தம் போன்ற சாத்திர நூல்களைப் பற்றியும் அறிந்து கொள்ளலாம்.

  • நேமிநாதம், வச்சணந்தி மாலை ஆகிய இலக்கண நூல்களைப் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

  • சிலப்பதிகாரத்திற்கு அடியாருக்கு நல்லார் எழுதிய உரையைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.

  • வைணவர்கள் எழுதிய உரைநூல்கள் பற்றியும் தனியன்கள் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 03-08-2017 11:41:24(இந்திய நேரம்)