தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A0514-கடன் வாங்கல்

  • 5.1 கடன்வாங்கல் (Borrowing)

    மொழியியல் அறிஞர்கள் ஒரு மொழியிலிருந்து பிற மொழிக்குச் சொற்களை வாங்கிக் கொள்ளும் முறைக்குக் கடன்வாங்கல் என்று பெயரிடுகின்றனர். இது தொடர்பாகப் பின்வரும் சொற்கள் குறிப்பிடத் தக்கவை.

    கடன் தரும் மொழி - Donor Language
    கடன் பெறும் மொழி - Borrowing Language

    5.1.1 கடன் பெறுவதின் நோக்கம்

    (1) கௌரவ நோக்கம் - Prestige Motive
    (2) நிறைவுபடுத்த விரும்பும் மனப்பான்மை - Need Filling Motive

    வேற்று மொழிச் செல்வாக்கால் சொந்த மொழியில் சொற்களை இடம் பெயர்த்து அமைத்துக் கொள்வதை மொழியியலார் Loan Shift எனக் கூறுகின்றனர்.

    சான்று: விமானம் (வானவூர்தி)

    பிற மொழிகளில் ஒரு சொற்றொடர் குறிக்கும் கருத்தைச் சொந்த மொழியிலுள்ள சில சொற்களைக் கூட்டிச் சொற்றொடராக்கி அக்கருத்தை வெளிப்படுத்தும் முறையும் உண்டு. இம்முறையை Loan Translation என்பர்.

    சான்று: Water Falls - நீர்வீழ்ச்சி

    பிற மொழிச் சொல்லையும் சொந்த மொழிச் சொல்லையும் சேர்த்து ஒரு சொல்லை உருவாக்கும் முறையை Loan Blend என்பர்.

    சான்று: தசநான்கு (நெடுநல்வாடை - 115)

    இவ்வாறு ஏற்படும் மொழிக் கலப்பினை இரண்டு வகையாகப் பிரித்துக் காணலாம்.

    • பிற மொழிகளிலிருந்து சொந்த மொழிக்கு வந்தவை.
    • சொந்த மொழியிலிருந்து பிற மொழிக்குச் சென்றவை..

    இம்முறையில் பிற மொழிகளிலிருந்து தமிழுக்கு வந்த சொற்கள் பற்றியும் தமிழிலிருந்து பிற மொழிகளுக்குச் சென்ற சொற்கள் பற்றியும் விரிவாகக் காண்போம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 00:12:40(இந்திய நேரம்)