தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் : II

    6. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் வழியாக அறியப்பெறும் தமிழின் சிறப்புகளை விளக்குக.

    தமிழின் தனிப்பெரும் சிறப்புகளை எல்லாம் இப்பிள்ளைத் தமிழ் எடுத்துக் கூறுகின்றது. குமரகுருபரர் சைவத்தையும் தமிழையும் இயலும் இடங்களில் எல்லாம் போற்றி உள்ளார்.

    சங்கம் வைத்து மொழி வளர்த்த பெருமை மதுரைக்கு உண்டு. எனவே, மதுரை என்றவுடன் தமிழும், தமிழ் என்றவுடன் மதுரையும் நினைவுக்கு வருவது இயல்பு. இதை வெளிப்படுத்துவதுபோல்


    தமிழொடு பிறந்து பழமதுரையில் வளர்ந்த கொடி

    (மீனா.பிள். 34)

    என்று மீனாட்சி தமிழோடு பிறந்ததாகக் கூறித் தமிழுக்கு ஏற்றம் தந்துள்ளார்.


    முன்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 02:32:54(இந்திய நேரம்)