தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாட முன்னுரை

  • 3.0 பாட முன்னுரை

    சென்ற இருபாடங்களில் ண், ன், ம், ய், ர், ழ் ஆகிய ஆறு மெய் ஈறுகளுக்கான  புணர்ச்சி பற்றி நன்னூலார் கூறியனவற்றைப் பார்த்தோம். இப்பாடத்தில் லகர, ளகர மெய் ஈற்றுப் புணர்ச்சி பற்றி அவர் மெய் ஈற்றுப் புணரியலில் கூறுவனவற்றைப் பார்ப்போம்.

    மெய் ஈற்றுப் புணரியலில் எல்லா மெய் ஈறுகளுக்கான புணர்ச்சியையும் தனித்தனியே ஒன்றன்பின் ஒன்றாகக் கூறி முடித்த பின்னர், நன்னூலார் வருமொழியின் முதலில் வரும் தகர மெய்யும் நகர மெய்யும் நிலைமொழியின் இறுதியில் வரும் ன், ண், ல், ள் ஆகிய மெய்களோடு புணரும்போது, வேறு மெய்களாகத் திரிகின்ற முறையைக் குறிப்பிட்டு விளக்குகிறார். உயிர் ஈற்றுப் புணரியலிலும் மெய் ஈற்றுப் புணரியலிலும் கூறிய புணர்ச்சி விதிகளுக்கு மாறுபட்ட சொற்புணர்ச்சிகள் சில செய்யுள் வழக்கிலும், பேச்சு வழக்கிலும் இருப்பதைக் கண்ட நன்னூலார் அவையும் ஒரு காரணம் கருதி அமைந்திருப்பதால் அவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை மெய் ஈற்றுப் புணரியலில் உள்ள இறுதி நூற்பாவில் குறிப்பிடுகிறார். இவற்றையும் இப்பாடத்தில் விளக்கமாகக் காண்போம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 12-10-2017 14:29:08(இந்திய நேரம்)