தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU Courses-பாட முன்னுரை

  • 3.0 பாட முன்னுரை

    இப்பாடத்தில் எழுத்தாக்கம், சொல்லெழுத்து (Spelling) என்றால் என்ன? போன்றவை விளக்கப்பட்டிருக்கின்றன. சொல்லெழுத்து என்பது எப்படி வரையறுக்கப்படுகிறது என்பதையும் பார்க்கலாம். இவற்றோடு தமிழில் சொல்லெழுத்தின் வளர்ச்சி எவ்வாறு அமைந்துள்ளது என்பது, வெவ்வேறு கால நூல்களிலிருந்து எடுத்துக்காட்டுகளைக் கொண்டு விளக்கப்பட்டிருக்கின்றது. மற்றும் சொல்லெழுத்து முறைகளான,

    1. ஒலியன் சொல்லெழுத்து (Phonemic Spelling)

    2. உருபொலியன் சொல்லெழுத்து (Morphophonemic Spelling)

    3. உருபுச் சொல்லெழுத்து (Morphonemic Spelling)

    4. சந்திச் சொல்லெழுத்து அல்லது புணர்ச்சிச் சொல்லெழுத்து (Sandhi Spelling)

    5. ஓரெழுத்துப் பன்மொழிச் சொல்லெழுத்து (Homographemic Spelling)

    போன்றவற்றைப் பற்றிய விளக்கங்களும் தக்க சான்றுகளுடன் அவற்றிற்கான தலைப்பின் கீழ் விளக்கப்பட்டிருக்கின்றன.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 06:03:28(இந்திய நேரம்)