தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

- எழுத்துச் சீர்திருத்தம்

  • பாடம் - 6

    D04116 எழுத்துச் சீர்திருத்தம்

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

              எழுத்துச் சீர்திருத்தம் எனும் இப்பாடம் காலந்தோறும் தமிழ்மொழி எவ்வாறு எழுத்துச் சீர்திருத்தத்தை ஏற்றுக் கொண்டு வந்துள்ளது என்பது பற்றி விளக்குகிறது.

         எழுத்துச் சீர்திருத்தத்திற்குத் தழுவல் முறையும் (adoptation) ஒரு காரணம் என வலியுறுத்துகிறது.

         தமிழ்மொழி மட்டுமல்லாமல் உலகில் பிறமொழிகளிலும் எழுத்துச் சீர்திருத்தம் நடைபெற்றுள்ளது என்பது பற்றிச் சான்றுகளுடன் விளக்குகிறது. .

    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

        இப்பாடத்தைப் படிப்பதன் மூலம் தொல்காப்பியர் காலம் முதல் தற்காலம் வரையில் தமிழில் நிகழ்ந்த எழுத்துச் சீர்திருத்தங்களைப் பற்றி அறியலாம்.
    • எழுத்துச் சீர்திருத்தம் தேவையா? என்பது பற்றித் தெளிவான விளக்கம் பெறலாம்.

    • உலக மொழிகளில் எத்தனை எழுத்து முறைகள் இருந்தன என்பது பற்றிய செய்தியை அறியலாம்.

    • தொல்காப்பியர் குறிப்பிடும் ஒரு சில எழுத்துகளுக்கான வரிவடிவங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

    • இடைக்கால இறுதியில் வீரமாமுனிவர் செய்த எழுத்துச் சீர்திருத்தப் பணியை அறிந்து கொள்ளலாம்.

    • தற்காலத்தில் தந்தை பெரியார் செய்த எழுத்துச் சீர்திருத்தத்தை விளக்கமாக அறிந்து கொள்ளலாம்.

    • எழுத்துச் சீர்திருத்தம் தமிழுக்கு இன்னமும் தேவை என்பதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சியை அறிந்து கொள்ளலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 06:10:12(இந்திய நேரம்)