தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU Courses- தொகுப்புரை

  • 3.7 தொகுப்புரை

    இப்பாடத்தின் மூலம் வேற்றுமை உருபு என்றால் என்ன? சொல்லுருபு என்றால் என்ன? என்பனவற்றின் விளக்கத்தைப் படித்து அறிந்திருப்பீர்கள். தமிழ் இலக்கணம் எவ்வாறெல்லாம் பிரிக்கப்பட்டு வந்தது என்பதையும் அறிந்திருப்பீர்கள். வேற்றுமை உருபு போன்றே சொல்லுருபும் வேற்றுமைப் பொருள் உணர்த்தி வருவதைத்     தெரிந்து     கொண்டிருப்பீர்கள்.     அவ்வாறு சொல்லுருபுகளாக வருபவை இடப்பொருளையும் வேற்றுமையையும் காலம் காட்டுதலையும் குறிப்புப்பொருளையும் உணர்த்தித்தான் வருகின்றன என்ற செய்தியையும் அறிந்திருப்பீர்கள். சொல்லுருபுகள் தற்காலத் தமிழில் குறிப்புப்பொருள் உணர்த்திவரும் சிறப்புடையனவாய்த் திகழ்தலை அறிந்திருப்பீர்கள். சங்ககாலத் தமிழ், இடைக்காலத் தமிழ், தற்காலத் தமிழ் என மூன்று பெரும் பிரிவாகப் பிரித்துச் சொல்லுருபுகளின் வளர்ச்சி வரலாற்றினைப் படித்ததன் மூலம் தற்காலத்தில் சொல்லுருபுகளின் வளர்ச்சி பெருமளவு இருப்பதை உணர்ந்திருப்பீர்கள்.

         தன் மதிப்பீடு : வினாக்கள் - II
    1.
    பிரயோக விவேகம் குறிப்பிடும் சொல்லுருபுகள் யாவை?
    2.
    ‘சொல்லுருபு’ என்ற சொல்லாட்சியை முதன்முதலில் கையாண்ட நூல் யாது?
    3.
    சுவாமிநாத     தேசிகர் வேற்றுமைப்பொருள் உணர்த்தும் உருபினை எத்தனை வகையாகப் பாகுபடுத்திக் கூறுகிறார்? அவை யாவை?
    4.
    தமிழில் சொல்லுருபு (postposition) என்று கூறும் சொல் ஆங்கில மொழியில் எவ்வாறு அழைக்கப்படுகின்றது?
    5.
    தற்காலத் தமிழில் சொல்லுருபை அமைத்து இரு உதாரணங்கள் கூறுக.
புதுப்பிக்கபட்ட நாள் : 06-08-2017 16:31:41(இந்திய நேரம்)