தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தொல்காப்பியக் காலம் முதல் தற்காலம் வரை ஏற்பட்ட சொற்பொருள் மாற்றங்கள்

  • 6.4 தொல்காப்பியக் காலம் முதல் தற்காலம் வரை ஏற்பட்ட சொற்பொருள் மாற்றங்கள்.

    முன்னரே கூறியபடி 17-ஆம் நூற்றாண்டு வரை, இலக்கியத் தமிழில் (எழுத்து வழக்கில்) குறிப்பிடத்தக்க அளவிற்குச் சொற்பொருள் மாற்றங்கள் இல்லை எனினும், மேலைநாட்டினரின் வருகைக்குப் பின்னர், தமிழ்மொழி வரலாற்றில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. இலக்கிய வரலாற்றில், மட்டுமன்றி மொழிவரலாற்றிலும் இம்மாற்றத்தை நன்கு உணர முடிந்தது. அச்சு இயந்திரங்களின் வருகையினாலும், உரைநடையின் தோற்றத்தாலும், சிறுகதை, புதினம், பத்திரிகை போன்ற பல்வேறு துறைகளில் தமிழ்மொழி, புதுமையை அடையத் தொடங்கியது. அன்று வரை எண்ணிப்பாராத பேச்சுத் தமிழுக்கு, மேலை நாட்டு அறிஞர்களான பெஸ்கி, போப், கால்டுவெல்     போன்றோர்     முதன்மையான இடத்தைக் கொடுத்தமையால்தான் தமிழ்மொழியின் சொற்பொருளில் ஏற்பட்ட பல மாற்றங்களை உணர முடிந்தது. காலச்சூழல், சமுதாய மாற்றம் ஆகியவற்றில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு ஏற்ப, தற்காலத் தமிழிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டன. எனவே, தொல்காப்பியக் காலத்திலுள்ள சொற்பொருளுக்கும், தற்காலத்     தமிழில்     இடம்பெறும் சொற்பொருளுக்கும் ஏற்பட்டுள்ள பெரும் மாற்றத்தைப் பின்வரும் பல சான்றுகளின் மூலம் நன்கு அறிந்துகொள்ளலாம். வரிசையில் சொல் தரப்பட்டு அதன் பொருள், இடம்பெறும் பழைய இலக்கியம், பழைய இலக்கியத் தொடர் ஆகியன பட்டியலில் தரப்படுகின்றன. அச்சொல்லுக்குரிய தற்காலப் பொருள் விரிவு கருதித் தனியாக அட்டவணையின் பின் தரப்பட்டுள்ளது.

    1. கழிவு

    பொருள்

    இலக்கியம்

    இலக்கியச் சான்று

    நிகழ்காலம்
    திவ்யபிரபந்தம், பெரிய திருமொழி (4,3,2)
    இறப்பெதிர்காலக் கழிவு மானானை
    இறந்தகாலம்
    நன்னூல், 145
    கழிவும், கவ்வோடு எதிர்வும், மின்ஏவல்
    சாவு
    சூடாமணி நிகண்டு

    -

    மிகுதி
    திவாகர நிகண்டு

    -

    அழிவு
    பிரபுலிங்கலீலை,9
    கழிவிலாத வாகாயம்
    பிராயச்சித்தம்
    காஞ்சிப்புராணம், கயிலா.30
    பெரும்பாவக்கழிவு.
    • தற்காலப் பொருள்

    1. கழிந்து போகை; passing, as time; leaving, as a place;          (discharging, as form the bowles.)

    2. கழிகடை; waste, refuse, leavings, dross; that which is      inferior, base, vile.

    3. தள்ளுபடி: Deduction, discount, rebate.      தள்ளுபடியான தொகை, மொத்த வட்டியிற் கழிவு எவ்வளவு?

    4. பாரிசேடம்; Reasoning by elimination.

    5. தேவையற்றது என்று கழிக்கப்பட்டதாகிய) குப்பைகூளம்; (தொழிற்சாலையில் பயன்படுத்தப்பட்டபின் சேரும் அல்லது வெளியேற்றப்படும்) ரசாயனக் கலப்புடைய பொருள்; garbage; (industrial) waste.

    பெருநகரங்களில்     சேரும்      கழிவுப்பொருள்கள் உடனடியாக அகற்றப்பட வேண்டும். / தொழிற்சாலையின் கழிவுகள் ஆற்றில் கலப்பதால் மீன்வளம் குறைகிறது.

    6. தரத்தில் குறைந்தது என்று நீக்கப்பட்டது; that which is discarded as inferior in quality.

    கழிவுப் புகையிலை / வெற்றிலைக் கழிவுகளை வாங்கிவந்து விற்கிறார்.

    7. உரமாகப் பயன்படும் கழிக்கப்பட்ட இயற்கைப் பொருள்; agricultural waste.

    ரசாயன உரங்களின் வருகையால் இயற்கைக் கழிவுகள் வீணாக்கப்படுகின்றன. / விவசாயக் கழிவுகள்.

    8. (ஏலச்சீட்டு முதலியவற்றில்)     அளிக்கிற) தள்ளுபடி; (விற்கும்போது பொருள்களுக்கு அளிக்கப்படும்) விலைக் குறைப்பு; (in auction - Chit) balance of the Money (divided among the members after bidding); discount.

    ஏலக் கழிவு போகக் கட்ட வேண்டிய பணம் எவ்வளவு? / இந்தச் சேலை, கழிவு போக இருநூறு ரூபாய்தான்.

    2. காதல்

    பொருள்
    இலக்கியம்
    இலக்கியச் சான்று
    அன்பு
    அகநானூறு. 55
    காதல் வேண்டி யெற்றுறந்து போதல் செல்லா என்னுயிர்
    வேட்கை
    சீவகசிந்தாமணி. 189
    காதலாற் காமபூமிக் கதிரொளியவரு மொத்தார்
    மகன்
    கம்பராமாயணம். யுத்தகாண்டம், பிரமாத்திரப்படலம். 164
    காலம் ஈதெனக் கருதிய இராவணன் காதல்
    பத்தி
    திவ்யப்பிரபந்தம். திருமாலை. 26
    காதலா னெஞ்சமன்பு கலந்திலேன்
    கொல்லுகை
    சூடாமணி நிகண்டு

    -

    தாக்குகை
    மருதூரந்தாதி.84
    காலனென்மேற் காதலை.... மாற்று
    பிரபந்த விசேடம்
    கூளப்பநாயக்கன் காதல்

    -

    • தற்காலப் பொருள்

    1. ஆவல் ; Earnestness, intentness, eagerness

    2. தறிக்கை; cutting in pieces, breaking, snapping

    3. ஆந்தை முதலியவற்றின் ஒலி ; cry, chirp of certain                  birds, as ominous

    4. எதிராப்பு; a peg for driving out a nail

    5. (இனக் கவர்ச்சி அடிப்படையில் ஆண், பெண் இருவரிடையே ஏற்படும்) அன்பு; நேசம்; love (between man and woman)

    6. (ஒன்றின் மேல்) ஆழ்ந்த பற்று; பிடிப்பு; விருப்பம் ; strong liking; love. அவர் இசையின் மேல் கொண்ட காதல் பெரிது.

    3. கிளை

    பொருள்
    இலக்கியம்
    இலக்கியச் சான்று
    இனம்
    புறநானூறு. 17
    களிறுநிலை கலங்கக் குழி கொன்று. கிளைபுகலத் தலைக்கூடி யாங்கு
    ஓர் இசை
    பரிபாடல். 11
    கிளைக்குற்ற வுழைச்சுரும்பின் கேழ் கெழு பாலை இசை
    பூங்கொத்து
    சிறுபாணாற்றுப்படை. 160
    கிளைமலர்ப் படப்பை
    சுற்றம்
    நாலடியார். 30
    களோதே வந்து கிளைகளாயில்தோன்றி
    பகுப்பு
    கம்பராமாயணம், யுத்தகாண்டம், கும்பகருணன், 16
    கிளையமை புவன மூன்றும்
    ஓர் இசைக் கருவி
    பெரிய புராணம். திருநாவுக். 76
    தண்ணுமை யாழ்முழவங் கிளைதுந்துபி
    கருவி
    கந்தபுராணம். ஆற்றுப். 31
    தாருவின் கிளைக ளென்ன
    மூங்கில்
    பிங்கல நிகண்டு

    -

    தளிர்
    திவாகர நிகண்டு

    -

    • தற்காலப் பொருள்

    1. (கிளைக்க, கிளைந்து); (மரத்தின் தொடர்ச்சியாக) பல பிரிவுகள் ஏற்படுதல்; கப்புவிடுதல்;branch out. கிளைத்து அடர்த்தியாக இருந்தது ஆலமரம். / மாமரம் இப்போது நன்றாகக் கிளைக்கத் தொடங்கியுள்ளது.

    2. ஒன்றிலிருந்து ஒன்றாகப் பிரிதல்; பெருகுதல்; branch off; multiply. குடும்பம் எப்படிக் கிளைத்துவிட்டது!/ தேசியக் கட்சியிலிருந்து கிளைத்த சிறுகட்சிகள் இவை.

    3. மரத்தின் தொடர்ச்சியாகப் பிரிந்த இலை, பூ, காய் ஆகியவற்றைத் தாங்கியிருக்கும் பகுதி; branch (of a tree); bough. மரத்தில் ஏறிக்கிளைகளை ஒடிக்காதே!/ குரங்கு கிளைக்குக் கிளை தாவிச் செல்லும்.

    4. (அலுவலகம், கட்சி நிறுவனம் முதலியவற்றின்) வேறு இடத்தில் அமைந்திருக்கும் பிரிவு; (of an institution) branch. எங்கள் வங்கியின் கிளை அயல் நாட்டிலும் உள்ளது. / கிளை நூலகம்.

    5. (ஒன்றின் துணையாக, உட்பிரிவு; supplementary. கிளைக் கேள்வி/ கிளைக் கதை.

    4. தோடு

    பொருள்
    இலக்கியம்
    இலக்கியச் சான்று
    கதிர்த்தாள்
    அகநானூறு 13, உரை.
    அழல்நுதி யன்ன தோகை....
    தொகுதி
    புறநானூறு. 238
    தோடுகொண் முரசுங் கிழிந்தன
    ஓலை
    பெரும்பாணாற்றுப்படை. 353
    வண்தோட்டுத் தெங்கின்
    பூ
    குறள். 1105
    தோட்டார் கதுப்பினாள் தோள்
    காதணி
    மணிமேகலை 3, வரி 118
    வெள்ளி வெண்தோட்டு
    பூவிதழ்
    தேவாரம் 885, 4
    தோடேறு மலர்க் கடுக்கை
    தொகுதி
    திவாகர நிகண்டு

    -

    • தற்காலப் பொருள்

    1. காதோலைச் சுருள் - Rolled palm leaf used as an ear ornament.

    2. கறிக்காக அரியப்பட்ட காயின் வட்டப் பகுதி; Round slice of fruits, used for curry.

    3. வட்டத்திரணை ; Round Moulding.

    4. (பெண்கள் அணியும் வைரம் முதலிய கல் பதிக்கப்பட்ட) வட்ட வடிவத் தங்கக் காதணி; ear stud (normally studded with precious stones, such as diamonds and worn by women)

    5. (புளியம்பழம் போன்றவற்றின்) மேல்புற ஓடு; shell (of certain fruits, esp. tamarind)

    5. பலி

    பொருள்
    இலக்கியம்
    இலக்கியச் சான்று
    காக்கை முதலிய பறவைகளுக்கு இடுஞ் சோறு
    குறுந்தொகை. 210
    காக்கையது பலியே.
    யாகம் முதலியவற்றில் தேவர், பிதிரர் முதலியோரை உத்தேசித்து இடும் உணவுப்பொருள்.
    புறநானூறு. 52
    பலிகண் மாறிய பாழ்படு பொதியில்
    பூசையில் அர்ச்சிக்கும் பூ முதலியன
    ஐங்குறுநூறு. 259
    மலர்சிலகொண்டு.... தேம்பலிச் செய்த வீர்நறுங் கையள்
    பிச்சை
    தேவாரம். 47,5
    பலிகொண்டுண்பவர்
    சோறு
    திவாகர நிகண்டு
    -
    சாம்பல்
    சூடாமணிநிகண்டு
    -
    கப்பம்
    யாழ்ப்பாணத்து மானிப்பாயகராதி
    -
    பலியிடுதற்குரிய பிராணி முதலியன.

    -

    -
    • தற்காலப் பொருள்

    1. பலியிடுதற்குரிய பிராணி முதலியன; sacrificial animal or offering.

    2. கிராமதேவதைகளுக்குப் பலியிடுவதன் பொருட்டு விடப்பெற்ற மானியம்; Inam granted for the service of making sacrifices to village deities.

    3. பலிசக்கரவர்த்தி - ...

    4. (இவ்வாறு நடக்கும் என்று சொல்வது அல்லது இவ்வாறு      நடக்க வேண்டும் என்று விரும்புவது) உண்மையாகவே      நடத்தல் அல்லது நிகழ்தல் be effective; come true. ஒரு      மாதத்திற்குள் வேலை கிடைக்கும் என்று ஜோதிடர்      சொன்னது பலித்து விட்டதே!/ உங்கள் ஆசிர்வாதம் நிச்சயம்      பலிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

    5. (நிறைவேற்ற நினைப்பது)வெற்றி பெறுதல்; come to fruition;      be successful. போன காரியம் பலித்ததா?/ உன்      தந்திரமெல்லாம் அவனிடம் பலிக்காது.

    6. (தெய்வத்திற்கு அளிக்கும்) உயிர்க்கொலை; காவுகொடுத்தல்;      offering lives (as sacrifice) ; (human or animal)      sacrifice) நரபலி.

    7. (விபத்து முதலியவற்றால்) உயிர் இழப்பு; loss of life. தீ விபத்தில் நால்வர் பலி/ இந்த மலைப் பாதை பலபேரை பலி கொண்டிருக்கிறது.

    8. (யாகம் முதலியவற்றில் முன்னோருக்கு இடும்) உணவுப் பொருள்; offering (given to the manes, etc) யாக பலி.

    6. பட்டி

    பொருள்
    இலக்கியம்
    இலக்கியச் சான்று
    காவலில்லாதவ-ன்/ள்
    கலித்தொகை. 51
    நோதக்க செய்யுஞ் சிறுபட்டி
    மகன்
    அகராதி நிகண்டு
    -
    களவு
    திவாகர நிகண்டு
    -
    பசுக்கொட்டில்
    பிங்கல நிகண்டு
    -
    இடம்
    பிங்கல நிகண்டு
    -
    நாய்
    பிங்கல நிகண்டு
    -
    சீலை
    பிங்கல நிகண்டு
    -
    சிற்றூர்
    நாமதீப நிகண்டு.486
    -
    வியபிசாரி
    விறலிவிடுதூது
    பட்டிமகன்மோகினி மந்திரி முழுதுமறிவான்
    பட்டிமாடு
    தாயுமான சுவாமிகள் பாடல். பெரியநாயகி.1
    புலப்பட்டியும் ..... அணுகாமல்
    புண்கட்டுஞ் சீலை
    தைலவருக்கச்சுருக்கம். தைல.128
    பட்டிகட்டுதல்
    பூச்செடி வகை
    புட்ப பலன்,65
    பட்டி வெண்பூவை ஈசன் பனிமலர்த் தாளிற் சாத்தல்.

    • தற்காலப் 1பொருள்

    1. ஆட்டுக்கிடை: sheep-fold

    2. கொண்டித்தொழு ; cattle pound

    3. தெப்பம்; float, raft

    4. கணைக்காலிலிருந்து முழங்கால்     வரை     சுற்றிக் கட்டிக்கொள்ளும் கிழிப்பட்டை; puttee, cloth wound round the legs in place of high boots.

    5. மடிப்புத்தையல் ; Hemming

    6. விக்கிரமாதித்தன் மந்திரி; The Prime minister of Vikramaditya of Ujjayini

    7. அட்டவணை; list, invoice; curriculum.

    8. பாக்குவெற்றிலைச் சுருள்; Betal leaf folded with arecanut.

    9. (கிராமத்தில்) பிறர் நிலத்தில் பயிர்களை மேயும் ஆடு, மாடு ஆகியவற்றை (உரிமையாளர் வந்து மீட்டுச் செல்லும்வரை) அடைத்து வைக்கும் இடம்; (cattle pound). பணம் கட்டிவிட்டு மாட்டைப் பட்டியிலிருந்து ஓட்டிக்கொண்டு வருகிறேன்.

    10. (சட்டை, பாவாடை முதலிய உடைகளில்) விளிம்பை மடித்துத் தைக்கும் பகுதி; மடிப்புத் தையல்; hemming).

    11. சிற்றூர்; கிராமம்; hamlet; village. ஒவ்வொரு பட்டியாகப்      போய்ச் செய்தியைச் சொல்லி வந்தோம்.

    (7) சிலம்பு

    பொருள்
    இலக்கியம்
    இலக்கியச் சொல்
    மகளிர் காலணிவகை
    ஐங்குறுநூறு. 389
    ஒன்றினவோ அவளஞ்சிலம் படியே.
    மலை
    புறநானூறு. 143
    நளியிருஞ் சிலம்பிற் சீறூர்
    பக்கமலை
    பெரும் பாணாற் றுப்பாடை. 330
    மால்வரைச் சிலம்பின்
    குகை
    பரிபாடல் 15
    சிலம்பிற் சிலம் பிசை யோவாது.
    ஒலி
    சூடாமணிநிகண்டு

    -

    • தற்காலப் பொருள்

    1. பூசாரிகள் கைச்சிலம்பு - oblong hollow ring of brass filled with pebbles and shaken before an idol in worship, etc;

    2. உள்ளீடு அற்ற வளையத்தினுள் கல் போன்றவற்றால் ஒலி எழுப்பக் கூடியதாகச் செய்யப்பட்ட தண்டை போன்ற (முற்காலத்தில் பெண்கள் காலில் அணிந்த) அணி; tinling anklets (worn by women in former times)

    8. குப்பை

    பொருள்
    இலக்கியம்
    இலக்கியச் சான்று
    தானியக்குவியல்
    பொருநராற்றுப்படை. 244
    குன்றெனக் குவைஇய குன்றாக் குப்பை.
    கூட்டம்
    கல்லாடம். 53
    ஆம்பலங் குப்பையை
    குவியல்
    திரிகடுகம்.83
    உப்பின் பெருங்குப்பை நீர்படியினில்லாகும்.
    மேடு
    சூடாமணி நிகண்டு

    -

    • தற்காலப் பொருள்

    1. செத்தை; Sweepings, rubbish, refuse

    2. மலம், குப்பை எடுக்கிறவன்; dung, excrement, ordure

    3. (கிழிக்கப்பட்ட தாள், கந்தல் துணி போன்ற) உபயோகம் அற்றவை என்று கழிக்கப்பட்டவை; trash; garbage. கூடையில் குப்பை நிரம்பி விட்டது, கொண்டுபோய் வெளியே கொட்டு!

    4. காற்று அடித்துக்கொண்டு வரும் தூசி, செத்தை முதலியவை; dust, dried leaves, sweepings, etc. முதலில் வீட்டைப் பெருக்கிக் குப்பையை அள்ளு!

    5. (வெறுப்பாகக் கூறும்போது) பயன் அற்றது; ஒன்றும் இல்லாதது; (in contempt) rubbish; trash. இது கதையா, வெறும் குப்பை.

புதுப்பிக்கபட்ட நாள் : 11-11-2017 15:16:55(இந்திய நேரம்)