Primary tabs
-
6.2 தொல்காப்பியம் - சங்க இலக்கியம் - திருக்குறள் இவற்றினிடையே ஏற்பட்ட சொற்பொருள் மாற்றம்.
தமிழ்மொழியின் வரலாற்றை அறிவதற்கு, அடிப்படையில் பெருந் துணை புரிவன பழமையான இலக்கணங்களும், இலக்கியங்களும் ஆகும். இன்று நம் தமிழ்மொழியில் காணப்படும் பழமையான இலக்கண நூல், தொல்காப்பியமே ஆகும். தொல்காப்பியத் தமிழின் மொழி இயல்பையும், சங்க இலக்கிய மொழி அமைப்பையும் நுணுகி ஆயும்போது, தொல்காப்பியமே சங்க இலக்கியத்துக்கு முற்பட்ட நூலாக விளங்குவதை அறியமுடிகின்றது. இதனையடுத்த காலகட்டத்தில், சங்க இலக்கியங்கள் ஒன்றன்பின் ஒன்றாகத் தோன்றியுள்ளன. இவ்விலக்கியங்கள் தொகுப்பாரும், தொகுப்பித்தாரும் மேற்கொண்ட முயற்சியால் பத்துப்பாட்டும், எட்டுத்தொகையுமாக, உருவாயின. இப்பேரிலக்கியத்தைத் தொடர்ந்து, திருக்குறள் என்னும் அறநூல் தோன்றி, தாய்மொழியின் வளர்ச்சியை அறியப் பேருதவி புரிகின்றது. திருக்குறள் உள்ளிட்ட சங்கம், சங்கம் மருவிய காலத்து அற இலக்கியங்களையும் அக, புற இலக்கியங்களையும் பதினெண் கீழ்க்கணக்கு எனத் தொகுத்தனர்.
அடுத்தடுத்த காலகட்டங்களில் தோன்றியனவாக இருப்பினும் தொல்காப்பியம், சங்க இலக்கியம், திருக்குறள் ஆகிய இம் மூன்றினிடையேயும் சொற்பொருள் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதைக் கீழ்வரும் பல்வேறு சான்றுகளின் வாயிலாக அறிந்துகொள்ளலாம்:
பொருள்
வ. எண்சொல்தொல்காப்பியம்
சங்க இலக்கியம்திருக்குறள்1.அருஅட்டை-
பெறுதற்கரிய உபதேசப் பொருள்2.தகர்விலங்குகளின் ஆண்பாற் பெயர்ஆட்டுக்கிடாய், மேட்டு நிலம், வருடைமான் கிடாய்செம்மறிக் கடா3.மைமேகம்அஞ்சனம், கருநிறம், கருமை, அழுக்கு, இருள், ஆடு, எருமை, குற்றம், மறு, மாசு, மேகம், கருமேகம், களங்கம், பசுமை பிறவி-
4.கடமைமான்வகை, சில விலங்குகளின் பெண் பெயர்ஒரு விலங்கு-
5.நூல்யாப்பு வகைகளுள் ஒன்று, பனுவல், புத்தகம், இலக்கணம்பஞ்சு நூல், வாய்க் கயிறுசுவடி, இலக்கியம், நூற்பொருள்6.சேவல்ஆண் குதிரை, ஆண் பறவை, விலங்கு, பறவைகளின் ஆண் பெயர்ஆண் அன்னம், ஆண்பறவை, கருடன்-
7.ஆண்மரவகைவீரன்-
8.எரிநெருப்புகார்த்திகை,
நட்சத்திர வகை, தீ, வெம்மைநெருப்பு9.ஏறுவிலங்கின் ஆண்இடபம், அடிக்கை, பருந்தின் கவர்ச்சி, எருமைக் கடா, இடி, அழிக்கை, ஆனேறு, இடி ஏறு, எறிதல், ஆண் விலங்கு, அழித்தல், ஆண்மான், சுறா ஏறுஆண்சிங்கம்10.கடுநஞ்சுகடுக்காய், கடுமரம், நஞ்சு-
11.கயந்தலைகுழந்தைமெல்லிய தலை, மென்மையை உடைய தலை, யானைக்கன்று-
12.கரகம்சிறிய கைச்செம்புகுண்டிகை, கமண்டலம், சிரகம்-
13.அடிசில்உணவுசோறு-
14.அணிஅணிகலன், நகைஅழகு, அலங்காரம், அணிகலன், ஒப்பனை,கோலம். திரட்சிஅணிகலன், நகை, அழகு, குளிர்ந்த அணி
15.அணைபஞ்சணை, மெத்தைமெத்தை, படுக்கை-16.நெல்தானியம், நெற்பயிர்தானிய வகை, மூங்கிலின் நெல்-17.அந்தணன்பார்ப்பனன்இறைவன், சிவபிரான், வியாழன்கடவுள்18.நோய்துன்பம், வருத்தம், வேதனைஅச்சம், பசியும் பிணியும், வியாதி, காம நோய், வருத்தம்
துன்பம், இன்னாதன, குற்றம், உடற்பிணி, காமப்பிணி, வினைப் பயன்கள்.19.அமரர்கடவுளர்தேவர்-
20.அமிழ்தம்தேவர் உணவு, அமுதம்அமுதம், தேவர்களின் உணவு, வாயில் ஊறும் இனிய நீர்சாவா மருந்து, அமிழ்த்துவது, தேவாமிர்தம்21.அழல்நெருப்பு, தீ, அக்கினிஅழுதல், தீக்கொழுந்து, காமத்தீ, நெருப்பு, விளக்கு, வெம்மை, தழல், செவ்வாய்தணல்22.அளகுகோழி, கூகை ஆகிய இரண்டு பறவையினத்திற்கும் உரிய பெண்மைப் பெயர்கோழிப்பெடை-
23.இரலைமான்வகை, வெண்மையான முதுகையும் பிளவுபட்டு முறுக்குண்ட கரிய கொம்புகளையும் உடைய விலங்கு, புல்வாய், கலைகலைமான்-
24.பகல்பகற்பொழுதுஇளவெயில், ஊழிக்காலம், பகற் காலத்தின் ஒளி, பகற்காலம், காலை முதல் மாலை வரையுள்ள காலம், சூரியன், நடுவுநிலைமை, நுகத்துப் பகலாணி, படுத்தல், ஒரு முகூர்த்தம்கூடாமை, பகலது, பகற்பொழுது25.எருஉரம்<உலர்ந்த சாணம்குப்பை, உரம்26.ஏடுபனை ஓலைபூவிதழ், மேன்மை-
27.ஐயர்முனிவர்இருபிறப்பாளர், தமையன்மார்-
28.பகடுஎருது (காளைமாடு)எருது, எருமைக் கடா, ஏர், பரப்பு, பெருமை, வலிமைஎருது
29.புல்வாய்கலைமான்மான்-
30.நாழிநாழி என்னும் ஒரு அளவுப்பெயர்ஒருவகை முகத்தலளவை-
தன் மதிப்பீடு : வினாக்கள் - I