தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தொகுப்புரை

  • 6.5 தொகுப்புரை

    நண்பர்களே! இதுவரை பல்வேறு காலகட்டங்களில் தமிழ்மொழியில் ஏற்பட்ட சொற்பொருள் மாற்றங்கள் குறித்துப் பல செய்திகளை அறிந்திருப்பீர்கள். இந்தப்பாடத்திலிருந்து என்னென்ன செய்திகளைத் தெரிந்துகொண்டீர்கள் என்பதை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்திப் பாருங்கள்.

    • தமிழ்மொழி வரலாற்றில், சொற்பொருள் மாற்றம் எத்தகைய இடத்தைப் பெற்றுள்ளது என்பதை அறிந்துகொண்டீர்கள்.
    • பழந்தமிழ் நூல்களான தொல்காப்பியம், சங்க இலக்கியம், திருக்குறள் போன்ற     நூல்களிடையே     காணப்படும் சொற்பொருள் மாற்றத்தை உணர்ந்துகொண்டீர்கள்.
    • 17 - ஆம் நூற்றாண்டு இலக்கிய வழக்கிலும் பழந்தமிழ்ச் சொற்கள்     இடம்பெற்றிருப்பினும் அச்சொல்லுக்குரிய பொருள்கள் மாறியுள்ளமையை உணர்ந்துகொள்ள முடிந்தது.
    • தொல்காப்பியக் காலம் முதல் தற்காலம் வரை ஒரு சொல் எத்தகைய பொருள் மாற்றங்களை எல்லாம் அடைந்து வந்துள்ளது என்பதை நன்றாகப் புரிந்துகொண்டீர்கள்.
    • தற்காலப் பேச்சுவழக்கிலும் எவ்வாறு பழந்தமிழ்ச் சொற்கள் தம் மூலப்பொருளில் இருந்து வெவ்வேறு பொருள்மாற்றம் அடைந்துள்ளன என்பதை அறிந்துகொள்ள முடிந்தது.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - II
    1.
    ‘கழகம்’ என்ற சொல் அடைந்த உயர்பொருட்பேறு யாது?
    2.
    ‘நுதல்’ என்ற சொல்லினது பொருள் மாற்றம் அடைந்ததா? காரணம் கூறுக.
    3.
    ‘கிளை’ என்ற சொல் பழந்தமிழ் இனத்தைக் குறிக்க, தற்போது எதைக் குறிக்கிறது?
    4.
    பட்டி, பழுது - இவ்விரு சொற்கள் பழந்தமிழில் எப்பொருளில் வழங்கி வந்தன?

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-11-2017 17:35:36(இந்திய நேரம்)