Primary tabs
-
தன்மதிப்பீடு : விடைகள் - II
1.குறிப்பிட்ட இலக்கியம் எந்தக் காலத்தில் தோன்றியதோ அந்தக் காலத்தின் மொழிநிலையை அது சார்ந்திருக்கும் என்று சொல்லுவதில் உள்ள நிலைப்பாடுகள் என்ன?
நான்கு நிலைப்பாடுகள்:
(அ) குறிப்பிட்ட காலத்தின் இலக்கியங்களிலுள்ள மொழி நிலைகளை யெல்லாம் குறிப்பிட்ட ஒரே தளத்துக்குள் கொண்டு வந்து விடுகிறோம்.
(ஆ) இதனடிப்படையில் குறிப்பிட்ட காலத்து இலக்கியத்தின் மொழி யையும் மொழி நடையையும் மொழி வரலாற்றையும் ஆராய்கிறோம்.
(இ) இலக்கிய வரலாறு காணவும் இத்தகைய பொதுவான மொழித் தளம் நமக்கு உதவுகிறது.
(ஈ) குறிப்பிட்ட கவிஞர்களின் மொழிநடையை அல்லது மொழித்திறனை ஆராயவும் காலத்தை மையமிட்ட மொழித்தளம் நமக்கு உதவுகிறது.