தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

திறனாய்வு அணுகுமுறைகள் - I

 • பாடம் - 3
  D06123 - திறனாய்வு அணுகுமுறைகள் - I
  இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

       இப்பாடம் திறனாய்வை மேற்கொள்ள உதவும் அணுகுமுறை பற்றி விளக்குகிறது. அணுகுமுறை என்றால் என்ன என்பதற்குரிய விளக்கம், அணுகுமுறையின் இன்றியமையாமை, அணுகுமுறை அமையும் விதம், அணுகுமுறை பொருத்தம், அணுகுமுறையின் வகைகள் என்பனவற்றைப் பற்றிக் கூறுகிறது.

      திறனாய்வு அணுகுமுறைகளில் ஒன்றான அழகியல் அணுகுமுறையைப் பற்றி இப்பாடம் விரித்துப் பேசுகின்றது. அழகியலின் வரையறை, அழகியல் அணுகுமுறையின் விவாதம், அழகியலின் கூறுகள், டி. கே. சிதம்பரநாதனார் அவர்களின் பார்வை, அழகியல் திறனாய்வு முன்னோடிகள், அழகியலும் மனப்பதிவும் முதலியன பற்றியும் இப்பாடம் விளக்குகின்றது.

  இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  திறனாய்வை எங்ஙனம் மேற்கொள்ள     வேண்டும் என்பதற்கான அடிப்படையைக் கற்றுத் தருகின்றது.

  அணுகுமுறையின் பல்வேறு விளக்கங்கள் மூலம் செம்மையான திறனாய்வுக்கு வழி வகுக்கின்றது.

  அழகியல் அணுகுமுறை என்பதை அறிதலோடு அதைக் கையாளும் முறையும் அறியப்படுகிறது.

  அழகியலின் முன்னோடிகள் பற்றியும், அவர்களின் திறனாய்வு பற்றியும் அறிவிக்கின்றது.

  அழகியலின் முன்னோடிகள் ரசிப்புத் தன்மையைக் கற்றுத் தருகின்றது.

  மேற்கண்ட ஐந்து பயன்களைப் பெறலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 07:29:20(இந்திய நேரம்)