தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தொகுப்புரை

  • 2.5 தொகுப்புரை

        திறனாய்வு வகைகள் என்பது திறனாய்வு செய்யப்படுகிற வழிமுறைகள் அல்லது செய்முறைகள் என்பதைக் குறிப்பதாகும். இது விளக்கமுறைத் திறனாய்விலிருந்து பல     வகைகளாக அமைகின்றது.

         இலக்கிய மதிப்பீடு என்பது, குறிப்பிட்ட இலக்கியத்தின் தரம், தகுதி, சிறப்பு, சீர்மை என்பவற்றைப் பேசுவதோடு, அவற்றின் கூறுகளும், பண்புகளும் இலக்கிய மதிப்பு உடையவனவா என்பதையும் பேசுகிறது.

         ஒரு பொருளை, இன்னொரு பொருளோடு பொருத்தி வைத்துச் சார்பு நிலையில் ஒப்பிட்டுப் பார்ப்பது என்பது அடிப்படையான ஒரு பார்வையாகும். அம்முறையில் அது ஒப்பீட்டுத் திறனாய்வு செய்வதாக அமைகிறது. இது பின்னர், ஒப்பீட்டு இலக்கியம் என்ற தனி ஆய்வுத்     துறையாக வளர்ந்துள்ளது.

         இலக்கியங்களின் சிறப்புப் பண்புகள் கருதி, அவற்றைப் பகுத்தும், தொகுத்தும் பார்ப்பது பகுப்புமுறைத் திறனாய்வாகும். உதாரணமாக, குறிப்பிட்ட ஒரு     தலைப்பில் பல்வேறு உள்தலைப்புகளை ஆராயும் போது அவ்விலக்கியத்தின் சிறப்பான பண்புகள் தெரிய ஏதுவாக அமையும்.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - II
    1)

    பின்வருவனவற்றுள் ஒப்பிடுதலுக்கு அடிப்படையானது எது?

    (அ)
    ஒப்பிடும் இரண்டு இலக்கியப்பனுவல்களும் ஒத்து இருக்க வேண்டும்.
    (ஆ)
    இரண்டும் ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டு இருக்க வேண்டும்.
    (இ)
    இரண்டிலும் ஒற்றுமையும் இருக்க வேண்டும்; வேற்றுமையும் இருக்க வேண்டும்.
    2)
    ஒப்பீட்டுத் திறனாய்வின் நோக்கம் யாது?
    3)
    கம்பனை மேலைநாட்டு இலக்கியத்தோடும், வடமொழி இலக்கியத்தோடும் ஒப்பிட்ட தமிழ் அறிஞர் யார்?
    4)
    பகுப்பு முறைத் திறனாய்வு - விளக்கம் தருக.
    5)
    தமிழில் பகுப்பு முறைத் திறனாய்வைப் பயன்படுத்தியவர்களில் ஒருவரைக் குறிப்பிடுக.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-08-2017 13:20:26(இந்திய நேரம்)