Primary tabs
-
6.0 பாட முன்னுரை
தமிழில் தோன்றிய துப்பறியும் நாவல்களில் ஜே.ஆர்.ரங்கராஜுவின் நாவல்கள் குறிப்பிடத்தக்கவை. இவர் எட்டு நாவல்களைப் படைத்துள்ளார். 1906 முதல் 1932 வரை இவருடைய படைப்புகள் வெளிவந்துள்ளன. இராஜாம்பாள், சந்திரகாந்தா, மோஹன சுந்தரம், ஆனந்த கிருஷ்ணன், இராஜேந்திரன், வரதராஜன், விஜயராகவன், ஜெயரங்கன் ஆகிய அனைத்துமே பொழுதுபோக்கு நாவல்களாகும்.
சர் ஆர்தர் கானன் டாயில் அற்புதப் படைப்பான ஷெர்லாக் ஹோம்சைப் போன்று, திருவல்லிக்கேணி கோவிந்தன் என்ற ஒரு துப்பறியும் பாத்திரத்தைப் படைத்துள்ளார். இவர் நாவல் கதைப்போக்கில் சம்பவங்களை மர்மங்களாக்கி, அவ்வப்போது எதிர்பாராத மாறுவேடங்களைக் கதாநாயகனுக்குக் கொடுத்து, அந்த மாறுவேடங்களை வாசகர்கள் தெரிந்து கொள்ளாத வகையில் மறைத்துக் கதையை விறுவிறுப்பாகப் படைத்துள்ளார்.