Primary tabs
- தன் மதிப்பீடு : விடைகள் - I
2. இரட்டைக் காப்பியங்கள் யாவை? அவ்வாறு வழங்குவது ஏன்?
சிலப்பதிகாரமும், மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்களாகும். இளங்கோவும் சாத்தனாரும் செந்தமிழால் கூடிய நட்பினர். அவர்கள் செய்த சிலம்பும், மணிமேகலையும் இரண்டு தனிக் காப்பியங்கள் ஆகாமல், பொருள் நிலையிலும், கதை நிலையிலும் ஒன்றுடன் ஒன்று ஊடுருவி ஒன்றி நிற்பதால் அவற்றை இரட்டைக் காப்பியம் என்று வழங்குவர்.